இதில் லாபம் அடைபவர்கள் விவசாயிகள் அல்ல, ஏதோ நான்கு இடைத்தரகர்கள் தான், இந்தியா முழுக்க நான்கு டீலர்கள் உட்கார்ந்துகொண்டு கிஷான் ஜாம் போட தக்காளிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள், விவசாயிகளின் வாழ்க்கை முன்னேறவேயிவில்லை. அதற்காகத்தான் மோடி அவர்கள் விவசாய சட்டத்தை கொண்டு வந்தார்கள். 

பாஜகவுக்காக அரசு வேலையை உதறிவிட்டு வந்தவன் நான், எல்லா துன்ப துயரங்களையும் சந்தித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன், ஆனால் கோபாலபுரத்து அடிமைகள் ஒரு டுவிட்மூலமாகவோ அல்லது மீம்ஸ் மூலமாகவோ என்னை அசிங்கப் படுத்தி விட முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழகத்தில் எப்படியேனும் காலூன்ற வேண்டும் என பாஜக துடியாய் துடித்து வருகிறது. அதற்காக என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்து வருகிறது. பாஜக பிராமணர்கள் கட்சி என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை கவரும் வகையில் பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எல். முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்திற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் தமிழக பாஜகவின் புதிய எழுச்சி உருவாக்கியுள்ளது. பெண்கள், இளைஞர்கள் மத்தியில் பாஜக மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு காரணம் அண்ணாமலை நேர்மை மிகுந்த காவல் அதிகாரியாக பணியாற்றியவர், தைரியமிக்க துடிப்புமிக்க இளைஞர் என்பதுதான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மற்ற வேறு எந்த தலைவர்களுக்கும் இல்லாத அளவுக்கு அண்ணாமலைக்கு ஆர்மி அமைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பாஜகவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காண முடிகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிரான விமர்சனங்களும் மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை என்றே சொல்லலாம். கடந்த 2021 ஆம் ஆண்டு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அதிகம் கண்டெண்ட் கொடுத்தவர் அண்ணாமலை தான் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. மீம்ஸ் கிரியேட் டர்கள் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை பலவகையில் விமர்சித்து கேலி கிண்டல் செய்து வந்தை யாரும் மறக்க முடியாது, அதே போல பாஜக தலைவர்கள் பலரும் மீம்ஸ் கிரியேட் உங்களுக்கு தீனிபோடும் தலைவர்கள் ஆகவே இருந்து வருவதையும் யாரும் மறுக்க முடியாது. அந்த வரிசையில் அண்ணாமலையையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் பலவகையில் சித்தரித்து அவரை பங்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் அதற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார். அதாவது, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்த நாள் நிகழ்ச்சி இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் அவரின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வாஜ்பாய் நாட்டிற்கு செய்த செயல்களை பாராட்டினார். சர்வதேச நாடுகள் இன்று இந்தியாவை தலைநிமிர்ந்து பார்ப்பதற்கும் சூழலை தனது ஆற்றலால், திறமையால் உருவாக்கித் தந்தவர் வாஜ்பாய் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இன்னும் விவசாய சட்டம் விவசாய சட்டம் எனக்கூறி பாஜகவை பலர் தாக்கி வருகின்றனர். நாங்களே விவசாயம் செய்பவர்கள் தான், இன்று மாலை கூட விவசாய தோட்டத்தில் இருந்து தான் வந்தேன். விவசாயத்தில் இருக்கும் லாப நஷ்டம் என்ன என்பது எனக்கு நன்கு தெரியும். வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்க முடியவில்லை, ஒரு மாதம் முருங்கைக்காய் 6 ரூபாய் என்கிறார்கள், இன்னொரு மாதம் 30 ரூபாய் என்கிறார்கள். ஒரு நேரத்தில் தக்காளி 140 ரூபாய்க்கு விற்கிறது, பல நேரம் தக்காளி 12ரூபாய்க்கு விற்கிறது. 

இதில் லாபம் அடைபவர்கள் விவசாயிகள் அல்ல, ஏதோ நான்கு இடைத்தரகர்கள் தான், இந்தியா முழுக்க நான்கு டீலர்கள் உட்கார்ந்துகொண்டு கிஷான் ஜாம் போட தக்காளிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள், விவசாயிகளின் வாழ்க்கை முன்னேறவேயிவில்லை. அதற்காகத்தான் மோடி அவர்கள் விவசாய சட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் அதைதான் இங்கு விமர்சிக்கிறார்கள். அண்ணாமலை தமிழகம் முழுக்க விவசாய சட்டத்தை ஆதரித்து பேசினார் ஆனால் மோடி அவர்கள் அதை நீக்கி விட்டார் அண்ணாமலைக்கு அசிங்கம் ஆகிவிட்டது பாருங்கள் என்று பலர் என்னை விமர்சிக்கிறார்கள். அரசு வேலையை விட்டு வந்தவன் நான்.. இனி எதுவுமே இல்லை.. நீங்கள் ஒரு ட்வீட் போட்டு என்னை அசிங்கப்படுத்திவிட முடியாது. நான் யார் என்று தெரியாமல் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இதெல்லாம் ஒரு தவம்.. தவம் எடுத்து பாஜகவிற்கு வந்திருக்கிறேன். என்னை டுவிட் போட்டு, மீம்ஸ் போட்டு கோபாலபுரத்து கொத்தடிமைகள் அசிங்கப்படுத்தவேமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.