காங்கிரஸ் கட்சியை மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசியதற்கு குஷ்பு வருத்தம் தெரிவித்தார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு வரவேற்பு தெரிவித்து உள்ளது.

 பிரபல நடிகை குஷ்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். அதன் பிறகு டெல்லியில் இருந்து சென்னை வந்த குஷ்பு விமானநிலையத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என குறிப்பிட்டார். குஷ்புவின் இந்தகருத்திற்கு மாற்றத்திறனாளிகள் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து குஷ்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்.. "ஆழ்ந்த துயரம், வேதனை கலந்த அவசரத்தில் ஒரு கணத்தில் 2 சொற்றொடர்களை தவறாக பயன்படுத்திவிட்டேன். வரும் காலங்களில்இது போல வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பேன்". என கூறிஇருக்கிறார்.குஷ்பு வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவரது கருத்தை வரவேற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பு,. தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல . மனநல சமூக குறைபாடு குறித்த கவலைகளை வெளிப்படுத்திய குஷ்புவுக்கு நன்றி. என தெரிவித்து உள்ளனர்.