மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி, நான் ஒரு நண்பரை இழந்துவிட்டேன் என்று உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் வார்த்தைகளைத் தாண்டி வருத்தப்படுகிறேன். நம் தேசத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. அது ஒருபோதும் நிரப்பப்படாது. ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவு தனிப்பட்ட இழப்பு. நான் ஒரு நண்பரை இழந்துவிட்டேன், மதிப்புமிக்க சக அமைச்சர் மற்றும் ஒவ்வொரு ஏழை மக்களும் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.