Asianet News TamilAsianet News Tamil

எனக்கு வேண்டாம்... தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதம்..!

அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்” என சசிகலா தெரிவித்துள்ளார்.

I look forward to meeting volunteers; Sasikala letter
Author
Tamil Nadu, First Published Nov 6, 2021, 11:28 AM IST

விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் எழுதி இருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர வைத்து இருக்கிறது.I look forward to meeting volunteers; Sasikala letter

 இதுகுறித்து அந்தக் கடிதத்தில்,’’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்திய பேரியக்கம் நம் புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவியாலும் வளர்த்தெடுக்கபட்ட ஒரு இயக்கம் ஆகும். ஏழை, எளியவர்களின் வாழ்வு வளம் பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழி வந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.

இதையும் படியுங்கள்:- சென்னை விமான நிலையத்தில் பயங்கரம்... விமானம் ஏற இருந்த இளைஞர் மயங்கி விழுந்து துடி துடித்து உயிரிழப்பு

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 I look forward to meeting volunteers; Sasikala letter

அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், தாங்கள் வாழுகின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவர்களது, வாழ்வாதாரத்தை இழந்து விட்டவர்களுக்கும், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்” என சசிகலா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:- அடித்து நொறுக்கப்பட்ட பாஜக எம்.பி.,யின் கார்... கோயிலில் சிறைபிடிக்கப்பட்ட தலைவர்கள்..!
முன்னதாக, நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் சசிகலா எழுதிய கட்டுரையில்,  `ஜெயலலிதா சொல்லி சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது உண்மையிலேயே பாசம் வைத்திருப்பவர்கள் இந்தக் கட்சியை விட்டுப் போக மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:- மக்களே வரும் 9 ஆம் தேதி நடக்கப்போகுது பயங்கரம்.. தமிழகத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை.. பிச்சு உதறுமாம்

தொண்டர்களின் மனக்குமுறலைப் பார்த்தேன். இனியும் அதைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுடன் இருந்து இந்தக் கட்சியை பழைய நிலைக்குக் கொண்டு வந்தேன். எனவே, நான் கட்சிக்கு வந்து அனைவரையும் நல்லபடியாகக் கொண்டு செல்ல வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை

.I look forward to meeting volunteers; Sasikala letter

கட்சி வீணாவதை ஒரு நிமிடம்கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லோரும் அ.இ.அ.தி.மு.க பிள்ளைகள்தான். அ.தி.மு.க என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தொண்டர்களை ஒரு தாய் போல அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழல் இல்லை. விரைவில் வருகிறேன், அனைவரையும் சந்திக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios