சென்னை விமான நிலையத்தில் பயங்கரம்... விமானம் ஏற இருந்த இளைஞர் மயங்கி விழுந்து துடி துடித்து உயிரிழப்பு.
இந்த வரிசையில் சென்னைக்கு சிகிச்சைக்கு வந்து டிஸ்சார்ஸ் ஆகி சொந்த மாநிலத்துக்கு திரும்ப இருந்த பயணி ஒருவர் சென்னை விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
சென்னையிலிருந்து கொல்கத்தா செல்ல வந்த பயணி சென்னை விமான நிலையத்தில் விமானம் ஏற இருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொல்கத்தாவிலிருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் வந்த நிலையில், சிகிச்சை முடிந்து மீண்டும் கொல்கத்தா திரும்புகையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு காலத்தில் மருத்துவ படிப்புக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் வெளிநாடுகளுக்கு படையெடுத்த நிலைமை மாறி, இன்று தமிழகத்திலேயே உயர்கல்வி பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் மருத்துவ தலைநகரமாக சென்னை உருவெடுத்துள்ளது. மேலை நாடுகளில் கூட செய்ய முடியாமல் போகும் பல அறுவை சிகிச்சைகளை தமிழக மருத்துவர்கள் சிறப்பாக செய்து சாதனை படைத்து வருகின்றனர். இதற்காகவே பாகிஸ்தான், சவுதி அரேபியா, கஜகஸ்தான், என பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் சென்னைக்கு வந்து சிகிச்சை பெறும் நிலைமை உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அதிக அளவில் மருத்துவ கல்லூரிகள் உள்ளன, மாணவர்களும் அதிக ஆர்வத்துடன் மருத்துவக் கல்வி கற்று வருகின்றனர். இதனால் தமிழகம் மருத்துவ தலைநகரமாக முன்னிலை பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் தமிழகத்தில் அதிநவீன மருத்துவ வசதிகளை சென்னையில் மட்டும் பெறக்கூடிய நிலைமை இருந்தது, ஆனால் அதுவும் இப்போது மாறி மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர் போன்ற நகரங்களில் அதிநவீன மருத்துவ சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையை நோக்கி படையெடுக்கும் நிலைமை உயர்ந்துள்ளது. அல்ல அல்ல தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் நிலைமை உள்ளது. சமீபகாலமாக திருநெல்வேலி, கோவை, போன்ற நகரங்கள் தலைசிறந்த மருத்துவ நகரமாக மாறி வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு பல வெளிநாடுகளை சேர்ந்த, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்காக வருகை புரிவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்து சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் சென்னைக்கு சிகிச்சைக்கு வந்து டிஸ்சார்ஸ் ஆகி சொந்த மாநிலத்துக்கு திரும்ப இருந்த பயணி ஒருவர் சென்னை விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சவ்விக் பெயின் (37) இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார், கடுமையான கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெறுவதற்காக வேலூர் சிஎம்சி மருத்துமனைக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வந்தார், பின்னர் அங்கு சிகிச்சை முடிந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், இந்நிலையில் அவர் தனது தந்தை சிவராஜ்குமார் பெயின் உடன், நேற்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமான நிலையத்தில் பயணம் செய்வதற்காக உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அப்போது சவ்விக் பெயின் திடீரென மயங்கி விழுந்தார். அதனையடுத்து மயங்கி விழுந்த மகனை எழுப்ப அவரது தந்தையின் முயற்சித்தார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை, இதனால் அவரது தந்தை கதறி அழுதார்.
உடனே விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் விரைந்து வந்து சவ்விக் பையினை பரிசோதித்தனர், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினார். இதை கேட்ட அவரது தன்னை தலையில் அடித்து கதறினார். உடனே சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சென்னை விமான நிலையத்தில் விமானம் ஏறும் தருவாயில் பயணி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.