இந்தி மொழி தெரியாததால் வட மாநிலத்தவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானதாக விளையாட்டு வீரர் மனம் திறந்து பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மொழி தெரியாததால் இந்திய அணியில் இருந்தும் தன்மை வெளியேற்ற முயற்சி நடந்ததாக ஆசிய அளவில் படகு தொடரில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரோகித் மரடாப்பா தெரிவித்துள்ளார் .  இந்தியா முழுவதும் ஒரே மொழி ஒரே தேசம் என்ற முழக்கத்துடன் இந்தியைப் முதன்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது . 

இந்நிலையில் இந்தி பேசாத  மாநிலங்கள் அதை ஏற்க மறுத்து வரும் நிலையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெறும் இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ஹிந்தி பெரும் சவாலாக இருந்து வருகிறது ,  குறிப்பாக தமிழகம் ,  கேரளம் ,  ஆந்திரா கர்நாடகா,  உள்ளிட்ட தென்  இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஹிந்தி மொழி தெரியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.   இந்நிலையில் காட்பாடியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் சர்வதேச கலை மற்றும் கலாச்சாரத்தை விழா நேற்று தொடங்கியது இதில் அர்ஜுனா விருது வென்ற வீரர் கணேஷ் ,  மற்றும் இந்திய படகுப்போட்டி வீரர் ரோகித்  மரடாப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .  

அப்போது போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கு  பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை அவர்கள் வழங்கினார் .  பின்னர் மேடையில் பேசிய மரடாப்பா இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு ,  பல மொழிகள் இருந்தாலும் இந்தி மொழிக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது . இந்தி தெரியாதவர்கள் இரண்டாம் தரமாக பார்க்கப்படும் நிலை உள்ளது .  எனக்கு இந்தி தெரியாததால் வட நாட்டு வீரர்களின் கேலி மற்றும் கிண்டலுக்கு  ஆளானேன்.  இருப்பினும் ஆர்வமுடன் கற்றதுடன்  ஆசிய அளவில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்று சாதித்ததாகவும் அவர் கூறினார் .  அதேபோல் நாட்டிற்காக ஒற்றுமையுடன் விளையாடியதால்  தங்கப்பதக்கத்தை வெல்ல முடிந்தது எனவும்  அவர் கூறினார் .