தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதுடன், தன்னையும் தன் கணவரையும் பிரிக்க முயற்ச்சி செய்யும் மாமனார்  மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கைப்பெண் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மாமனார் மாமியாரை போலீசார் அறிவுருத்தியதுடன் இருவரையும் பிரிக்க முயற்ச்சி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்தவர் பூமிகா (27) பி.டெக் பட்டதாரியான  இவர் நெல்லையில் உள்ள நகைக்கடையொன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே கடையில் பணியாற்றி வந்த பரமக்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருடன் பூமிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் இருவரும் , கடந்த 6 மாதத்துக்கு முன்பு நெல்லையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.  அருண்குமாரின்  இந்தநடவடிக்கை அவரது  நண்பர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனால் அவரது நண்பர்கள் அருண்குமார் விட்டு விலகினார்.  அருண் குமாரின் பெற்றோர் இத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் திருநங்கை பூமிகாவை பிரிந்து வருமாறு மன்றாடினர், ஆனால் அருண்குமார் பெற்றோர் கூறியதை ஏற்கவில்லை...

பிரிந்து வராவிட்டால் இனி தங்களை உயிருடன் பார்க்க முடியாது என கூறி அருண்குமாரை வலுக்கட்டாயப்படுத்தினர். ஆனால் பூமிகாவுடன் தனியாக வீடு எடுத்து தங்கி  வாழ்ந்து வந்தனர் அருண்குமார்.  இந்நிலையில் அவரின் பெற்றோர்கள் தன் மகனை விட்டு விலகிவிடுமாறு தொடர்ந்து பூமிகாவுக்கு போன் செய்தும் ஆட்களை அனுப்பியும்  மிரட்டி வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தனை மகனை விட்டு விலகாவிட்டால்  அடித்து கொலைசெய்துவிடுவோம் என்றும் பூமிகாவை எச்சரித்தனர். இதனால் நெல்லையிலிருந்து வீட்டை காலி செய்துகொண்டு பூமிகாவும் அருண் குமாரும் சேலத்திற்கு குடியேறினர்.   இருவரும் சேலத்தில் இருப்பதை  எப்படியோ தெரிந்து கொண்ட அருண்குமாரின்  பெற்றோர் பூமிகாவை விடாமல் மிரட்டினார். 

இதனால் திருநங்கை பூமிகா சேலம் மாநகர காவல் ஆணையரிடம் தனக்கு பதுகாப்பு வழங்குபடி புகார் கொடுத்தார். உடனே இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் சேலம் அனைத்து மகளீர் போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய மகளீர் போலீசார்.  பூமிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அருண்குமாரின் பெற்றோர்களை தொலைபேசியில் அழைத்து அவர்களை எச்சரித்ததுடன் பூமிகா அருண்குமாரை இனி பிரிக்க முயற்ச்சி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து பூமிகா அருண்குமார் தம்பதியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.