I have only right to call jayalalithaa as amma says manjula

மாதுக்குட்டியின் மனைவி! தீபாவுக்கு செம ஷாக் கொடுக்கும் படி வந்து சேர்ந்திருக்கும் பெங்களூரு மஞ்சுளா ஒரு பரபரப்பை கிளப்பாமல் அடங்கமாட்டார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். 

“நான் தான் ஜெயலலிதாவின் மகள். இதை டி.என்.ஏ. சோதனை நடத்தி உறுதிப்படுத்தி, நானே ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மஞ்சுளா. 
உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருக்கும் 17 பக்கங்கள் கொண்ட மனுவில் சொல்லியிருப்பது இதுதான்...

“நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். 1980 ஆகஸ்ட் 14-ம் தேதி பிறந்தேன். எனது பாட்டி ஜெயலட்சுமிதான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவின் சகோதரி சைலஜாவும், அவரது கணவர் சாரதியும்தான் என்னை வளர்த்தனர். நான் ஜெயலலிதாவை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று எனது வளர்ப்புத்தாய் சைலஜா 1996ம் வருஷம் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்தான் என் அம்மா என்று சொல்லவில்லை. நானும் சென்று ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது அவர் என்னை ஆரத்தழுவி நலம் விசாரித்தார். அதன் பிறகு பல முறை ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறேன். 

2015-ல் என் வளர்ப்புத் தாய் சைலஜா காலமாகிவிட்டார். வளர்ப்பு தந்தை சாரதியும் இறந்துவிட்டார். அவர் இறக்கும் போதுதான் நான் ஜெயலலிதாவின் மகள் எனும் உண்மையை என்னிடம் சொன்னார். அதன் பிறகு ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் நீதி கிடைக்கவில்லை. 

ஜெயலலிதா இறந்தபோது அவரது மரனத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். ஆனால் எனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 

ஜெயலலிதா இறந்த பிறகு அவரது சொத்துக்களுக்கு தீபா, தீபக் ஆகியோர் உரிமை கோருகின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு நாந்தான். இதை நிரூபிக்க ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும். அதேபோல் எனக்கும் டி.என்.ஏ. சோதனை நடத்தி, நானே அவரின் வாரிசு என்று நிரூபியுங்கள். 

மேலும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ய விரும்புகிறேன். அதற்கு கோர்ட் அனுமதி அளிக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார். 

மஞ்சுளாவின் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிட சொல்லியிருக்கிறது. 

இந்நிலையில் அ.தி.மு.க.வில் ஒரு காலத்தில் கோலோச்சி, இப்போது சைலண்ட் ஆக்கப்பட்டிருக்கும் சீனியர்கள் சிலர்தான் இந்த மஞ்சுளாவின் பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களிடம் மஞ்சுளா உண்மையிலேயே ஜெ.,வின் வாரிசா என்று கேட்டபோது “மஞ்சுளா எங்களிடம் பேசும்போது, இந்த தமிழ்நாடே அவரை அம்மா என்றழைக்கிறது. ஆனால் அவரை அம்மால் என அழைக்கும் முழு உரிமை எனக்கு மட்டும்தானே இருக்கிறது என்றுதான் எங்களிடம் பேச துவங்கினார். அதிலேயே அதிர்ந்தோம் நாங்கள். 

ஜெ., வின் பழைய டைரியை புரட்டிப்பாருங்கள். 1960 களில் இருந்து 1980 வரை தமிழ் திரையுலகில் கலக்கினார் ஜெயலலிதா. ஆனால் இடையில் சுமார் 2 வருடங்கள் திடீரென மாயமானார். பின் 1982ல் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதை யோசித்துப் பாருங்கள்.” என்கிறார்கள். 
யோசிக்கத்தான் வேண்டும்.