தமிழகம்  புதுச்சேரியை போல தெலுங்கானாவிலும்  ஆளுநருக்கு முதல் வரைக்குமான விரிசல் அதிகரித்துள்ளது. தற்போது இது தான் தெலுங்கானாவில் ஹாட் டாபிக்.  கடந்த குடியரசுதினவிழா கொண்டாட்டத்தின்போது ராஜ் பவனில் நடந்த குடியரசு தின விழாவை அம்மாநில முதல்வர் கேசிஆர் புறக்கணித்தார்.

தனக்கு எப்போதும் ஈகோ இல்லை என்றும், மக்கள் பிரச்சினைகளை பிரதானம் என்றும், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த உகாதி கொண்டாட்டத்தை மாநில முதல்வர் கேசிஆர் புறக்கணித்தது குறித்துத் தான் வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழகம் புதுச்சேரியை போல தெலுங்கானாவிலும் ஆளுநருக்கு முதல் வரைக்குமான விரிசல் அதிகரித்துள்ளது. தற்போது இது தான் தெலுங்கானாவில் ஹாட் டாபிக். கடந்த குடியரசுதினவிழா கொண்டாட்டத்தின்போது ராஜ் பவனில் நடந்த குடியரசு தின விழாவை அம்மாநில முதல்வர் கேசிஆர் புறக்கணித்தார். மாநில அமைச்சர்களும் யாரும் அதில் பங்கேற்கவில்லை, இதேபோல் சமீபத்தில் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரும் கவர்னர் உரையின்றி மரபுக்கு மாறாக நடத்தப்பட்டது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரின் மேடரம் ஜாத்ரா வருகையின் போதும் ஆளுநரை அமைச்சர்கள் வரவேற்க செல்லவில்லை, ஆளுனர் அங்கு வருவதற்கு முன்னர் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என மக்கள் பிரதிநிதிகள் யாருமின்றி குலதெய்வமான சம்மக்கா- சாரலம்மாவை வழிபாட்டு திரும்பினார் ஆளுநர்.

இதையும் படியுங்கள்: பெரியாரிஸ்டுகள் எங்கே போனீங்க..?? வன்னியர்களுக்கு ஏன் குரல் கொடுக்கல.. குமுறும் அன்புமணி.

அப்போது ஆளுநருக்கான புரோட்டாகால் மீறப்பட்டது சர்ச்சையாக வெடித்தது. இதேபோல் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அனும கொண்டா மாவட்டத்திற்கு வருகை தந்தபோதும் அங்கும் அவரை வரவேற்க அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவில்லை, அதேபோல் கிரேட்டர் வாரங்கள் மேயரும் ஆளுநரை வரவேற்க செல்லவில்லை. எந்த வரவேற்பும் இன்றி தேசிய கலாச்சார விழாவில் தொடக்க விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அப்போதும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆளுநரை புறக்கணித்தனர். இப்படி தொடர்ச்சியாக மாநில அரசு ஆளுநரை புறக்கணித்து வருகிறது. இந்நிலையில்தான் ராஜ்பவனில் நடைபெற்ற யுகாதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்வர் கேசிஆர் மற்றுமுள்ள 119 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளுநர் மாளிகையில் இருந்உத அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கேசிஆர் அல்லது அமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் யாதவ் மட்டும் கலந்து கொண்டார். அதேபோல் பாஜக எம்எல்ஏக்கள் ரகுநந்தன் ராவ், டிபிசிசி தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில்தான் ஆளுநர் மாளிகையில் நடந்த உகாதி நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநரான தனக்கு இருக்கும் சில வரம்புகள் குறித்து தனக்கு நன்கு தெரியும் என்றார். தன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும், அதேநேரத்தில் தன்னிடம் ஈகோ இல்லை என்றும், மக்கள் பிரச்சினைகளுக்காக ஒரு குறை தீர்ப்பு பிரிவை அமைத்துள்ளதாகவும அவர் கூறினார். எல்லோருடனும் இணக்கமாக இருக்க தனக்கு தெரியும் என்ற அவர் தெலுங்கானா மக்களின் நலனுக்காகத் தான் ராஜ்பவன் இயங்கி வருகிறது என்றார். அடுத்த மாதம் முதல் ராஜ்பவனில் பிரஜா தர்பார் நடத்தப்படும் என்றும் தமிழிசை கூறினார்.

இதையும் படியுங்கள்: இந்திய எல்லையில் சீனா அத்துமீறினால் ரஷ்யா பாதுகாப்புக்கு வராது.. இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா.

தொடர்ந்து பேசிய அவர், தெலுங்கானா முதல்வர் தனது அழைப்பை புறக்கணித்தது குறித்து தான் வருத்தப்படவில்லை என்றும், ஆளுநர் மாளிகையில் இருந்து 119 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் அதில் சிலர் மட்டுமே வருகை தந்தனர் என்றும் கூறினார். ஆனால் இதே பிரகதி பவனில் (முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம்) நடைபெறும் உகாதி கொண்டாட்டத்திற்கு தன்னை அழைத்திருந்தால் அங்கு தனக்கு முறையான வரவேற்பு கிடைக்காவிட்டாலும் அதில் நான் கலந்து கொண்டிருப்பேன் என அவர் கூறினார்.

ஆனால் அவர்கள் தன்னை அழைக்க வில்லை என்ற அவர் கேசிஆர் சர்ச்சையை உருவாக்கும் நபரும் அல்ல, இடைவெளியை உருவாக்கம் நபர் அல்ல, கேசிஆருடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கிறது என்றார். ஆளுநரின் ராஜ்பவனுக்கும் முதல்வரின் அதிகாரபூர்வ இல்லமான பிரகதி பவனுக்கும் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாக வருகிறது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது இது தெலங்கானா அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.