பணம் சம்பாதிக்க அமைச்சர்கள், எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதில்லை. நல்ல நேரம் வந்தால் கோடீஸ்வரன் ஆகலாம் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில்;- பணம் சம்பாதிக்க அமைச்சர்கள், எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதில்லை. நல்ல நேரம் வந்தால் கோடீஸ்வரன் ஆகலாம். கட்சியில் பல அடிதடிகள், போராட்டங்களை சந்தித்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றார்.

மேலும், 15 ஆண்டுகள் உழைத்தால் தான், கட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக முடியும். அதிமுக ஆட்சியால் தான் வடமாநில இளைஞர்கள் வேலை தேடி தமிழகம் வருகின்றனர்.