Asianet News TamilAsianet News Tamil

டிடிவியுடன் 11 வருஷம் ஒன்னும் மண்ணுமா இருந்தவன் நான்.. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா..

தஞ்சை பூண்டி யில் நடைபெற்ற டிடிவி தினகரன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் அழைப்பு விடுத்திருந்தார்

I have been with DTV for 11 years. ops brother o raja shocking statement.
Author
Chennai, First Published Oct 28, 2021, 11:04 AM IST

டிடிவி தினகரன்  வாட்ஸப்பில் அழைப்பு விடுத்ததால் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அவருடன் நான் 11 ஆண்டுகள் தங்கி இருந்தவன் என்ற அடிப்படையில் நிகழ்ச்சிக்கு சென்றதாகவும் டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓபிஎஸ்சின் தம்பி ஓ. ராஜா  கூறியுள்ளார். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இது அதிமுக வட்டாரத்தில் மிகப்பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இரட்டை தலைமையில் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது அதிமுக, சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் மொத்த அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமி தனது  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு அதிமுகவின் நிலைமை உள்ளது. கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தாளும், முதல்வர் வேட்பாளராக களமிறங்கியது முதல், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்றது முதல் ஓபிஎஸ்சை காட்டிலும் இபிஎஸ்சின் கை ஓங்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் சிறையில் இருந்து வந்தவுடன் தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவோ சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்து அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதற்கிடையில் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அதிமுகவில் அவரால் இணைய முடியவில்லை, அந்த அளவிற்கு ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமை சசிகலாவை கட்சியில் சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறது. 

I have been with DTV for 11 years. ops brother o raja shocking statement.

இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி சந்தித்துள்ள நிலையில், இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது தொண்டர்களை சந்திக்க போகிறேன் கட்சியை பாதுகாக்க வேண்டும்  என்ற முழக்கத்துடன் சசிகலா ஐந்து நாள் அரசியல் சுற்றுப்பயணம் துவங்கியுள்ளார். இது அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது, இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளரிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என கூறியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிவந்த நிலையில் ஓபிஎஸ் என் கருத்து அதிமுகவில் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

I have been with DTV for 11 years. ops brother o raja shocking statement.

இதையும் படியுங்கள் : கோயில் நகைகளை உருக்க கூடாது.. நீதி மன்றம் போட்ட அதிரடி நிபர்ந்தனை. ஆடிப்போன இந்து அறநிலையத்துறை.

ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என ஒருபுறம் விமர்சனங்கள் தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டிடிவி தினகரன் இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜா பங்கேற்றிருப்பது அதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சிகொள்ள செய்துள்ளது. அவரது அண்ணன் ஓபிஎஸ் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என கூறுகிறார், அதற்கேற்ப அவரது தம்பி டிடிவி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாந்தமாக கலந்து கொள்கிறார், மொத்த குடும்பமும் சசிகலாவுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள் என அதிமுகவில் கலக்கக் குரல் காட்டுத் தீயாய் பரவிவருகிறது. இந்நிலையில் தனியார் இணையதள செய்தி நிறுவனத்திற்கு இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ள ஓபிஎஸ்சின் சகோதரர் ராஜா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வாட்ஸ்ஆப்பில் அழைப்பு விடுத்தார். அதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேரிட்டது என அவர் கூறியுள்ளார்.

I have been with DTV for 11 years. ops brother o raja shocking statement.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, தஞ்சை பூண்டி யில் நடைபெற்ற டிடிவி தினகரன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் அழைப்பு விடுத்திருந்தார், அதனால் அதில் கலந்து கொண்டேன், அந்த கூட்டத்தில் சென்று வந்ததே பெரும்பாடு, அப்படித்தான் நான் அதில் சென்று வந்தேன், இதில் அரசியல் ஏதும் இல்லை, டிடிவி தினகரன் மட்டுமல்ல அவரது சம்பந்தி வாண்டையார் எனக்கு அழைப்பு கொடுத்திருந்தார், இருவரும் சேர்ந்து அழைத்தனர். அதனால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன், எனது சகோதரர் ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக என்பது எனக்கு தெரியாது, ஆனால் எனக்கு அழைப்பு வழங்கப்பட்டது அதனால் நான் சென்றேன். நான் 11 வருடம் அவருடன் தான் இருந்தேன், எங்கள் வீட்டில் அவர் தங்கியிருக்கிறார், திருமணத்திற்கே எனக்கு பத்திரிகை வந்தது, எனது அண்ணியார் இறந்ததால் அதில் பங்கேற்க முடியவில்லை. இதில் அரசியல் எதுவும் இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.

I have been with DTV for 11 years. ops brother o raja shocking statement.

இதையும் படியுங்கள் :அந்த கொலைகாரனை லண்டனில் வைத்து கைது செய்யுங்கள்.. பிரித்தானிய அரசின் போலீசுக்கு வைகோ கோரிக்கை.

டிடிவி தினகரனுடன் 11 ஆண்டுகள் இருந்த நட்பின் அடிப்படையில் ஓ.ராஜா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எவரும் சசிகலா மற்றும் அவரைச் சார்ந்த எவருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் டிடிவி தினகரன் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது பல்வேறு யூகங்களையும், கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும்  ஏற்படுத்தியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios