Asianet News TamilAsianet News Tamil

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.. மேடையில் உதயநிதி சொன்ன நச் விளக்கம்.

இந்த மருத்துவமனையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் துரிதமாக செயல்பட்டு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது தீ விபத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர்களைதான் தான் கடவுளாக பார்க்கிறேன்.

I do not believe in God .. These are God .. Udayanidhi Stalin who celebrated doctors.
Author
Chennai, First Published Aug 7, 2021, 1:42 PM IST

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் கடந்த மே மாதம் இந்த மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டபோது விரைந்து செயல்பட்டு குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர்களை தான் நான் கடவுளாக பார்க்கிறேன் என சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதியநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு அங்கிருந்துவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள  சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினைத்தை முன்னிட்டு அம்மருத்துவமனைக்கு 90லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை மையம் புதுப்பிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.  

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துவக்கமாக மேடையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்;2010 ஆம் ஆண்டு நற்பணி மன்றமாக துவங்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. 

இந்த மருத்துவமனையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் துரிதமாக செயல்பட்டு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது தீ விபத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர்களைதான் தான் கடவுளாக பார்க்கிறேன். கொரோனா தொற்றின் இரண்டாம் தாக்கத்தை சிறப்பாக கையாண்டு மக்கள் சேவை செய்து வருகிறது திமுக அரசு. தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1லட்சத்து 20ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ள தொகுதியாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி இருக்கிறது. இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன் என்றார்.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios