தெருவில் போகிற நாய்களுடன் என்னால் விவாதம் செய்ய முடியாது என தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

அண்ணாமலை எந்த தேதி, எந்த நேரம் சொல்கிறாரோ, அந்த நேரத்துக்கு எந்த விஷயம் குறித்தும் நான் நேரலையில் விவாதத்துக்கு தயாராக இருக்கிறேன் என திமுக எம்.பி., செந்தில்குமார்  தெரிவித்து இருந்தார்.  அண்ணாமலை எல்லாம் விவாதம் நடத்தும் அளவிற்கு தகுதியானவரும் இல்லை. திறமையானவரும் இல்லை. என்னுடன் விவாதத்திற்கு வரச்சொல்லுங்கள் என கார்த்திகேய சிவசேனாதிபதி சவால் விடுத்திருந்தார். அவரைப்போலவே சவுக்கு சங்கர் உள்ளிட்ட திமுக அனுதாபிகள் அண்ணாமலையை விவாதத்திற்கு அழைத்திருந்தனர். 

அதற்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை, ‘’ஓவ்வொரு நாய்க்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தோம் என்றால் ஒரே இரவில் தெருவில் போகிற நூறு நாய்கள் வவ்வென்று குரைக்கும். எந்த நாய்க்கு பதில் சொல்றது? இந்த நாய்க்கு பதில் சொல்றதா? இல்லை அந்த நாய்க்கு பதில் சொல்வதா..? நீங்க விவாதத்துக்கு வருவதாக சொன்னீர்கள்... விவாதத்துக்கு வாருங்கள் என அழைக்கிறார்கள். நான் சொன்னேன் தலைவர்களுடன் விவாதத்துக்கு வருகிறேன் என்று தான் சொன்னேன். வீட்டுல வேலையில்லாத யார் யாருடனோ நான் விவாதத்துக்கு வரமாட்டேன்.

எனக்கு வேலை இருக்கு, கட்சிப்பணி இருக்கிறது.  உனக்கு வீட்டில் வேலை இல்லையென்றால் வீட்டில் உட்கார்ந்து டிவியோ, மூவியோ பார். நீ என்னய்யா பணி செய்கிறாய் என்றால், ‘நான் சமூக ஆர்வலர்’என்கிறார்கள். நான் என்னுடன் விவாதத்துக்கு அழைத்தது எம்.எல்.ஏ, எம்.பிக்கு போட்டியிட நினைப்பவர்களுடனும், தமிழகத்தை ஆளப்போகிறவன் என நினைத்து ஆட்சிக்கு வரத்துடிப்பவர்களுடனும் தான் நான் விவாதத்துக்கு தயார் என்று சொன்னேன். சமூக ஆர்வலர்களுடன் எல்லாம் என்னால் விவாதத்துக்கு வர முடியாது. வீதியில் இருப்பவன் எல்லாம் கிளம்பி வந்தால் என்னால் அவர்களுடன் விவாதிக்க முடியாது'’ எனத் தெரிவித்துள்ளார்.