Asianet News TamilAsianet News Tamil

நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்... பெயரையே மாற்றிக் கொண்ட நித்யானந்தா... இதென்ன புது கலாட்டா..!

நித்தியானந்தாவின் முகநூல் பதிவிற்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பாது என நித்தியானந்தாவின் தற்போதைய அறிக்கை குறித்து மடத்தின் நிலைப்பாட்டை வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 

I am the new owner of Madurai ... Nithyananda who changed his name
Author
Tamil Nadu, First Published Aug 18, 2021, 5:35 PM IST

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் என கைலாசா அதிபர் நித்யானந்தா அறிவித்துள்ளது பகீரை கிளப்பி உள்ளது. 

தனது பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் பெயரை மாற்றி முகநூலில் அறிவித்துள்ளார் நித்யானந்தா. அத்தோடு ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் பேஸ்புக்கில் சாமியார் நித்தியானந்தா பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.I am the new owner of Madurai ... Nithyananda who changed his name

மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 12-ம் தேதி காலமானார். அவரது உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மறைவால் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் என்று நித்தியானந்தா பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.I am the new owner of Madurai ... Nithyananda who changed his name

293வது பீடாதிபதியாக தான் பதவியேற்றுகொண்டுள்ளதாகவும் இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா தெரிவித்துள்ளார். தனது பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.I am the new owner of Madurai ... Nithyananda who changed his name

கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் 2019ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது. மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தன்னை நித்யானந்தா அறிவித்துள்ள நிலையில், அவருக்கும் மடத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என மடத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீன மடம் மிக தொன்மையான மரபு கொண்டது. நித்தியானந்தாவின் முகநூல் பதிவிற்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பாது என நித்தியானந்தாவின் தற்போதைய அறிக்கை குறித்து மடத்தின் நிலைப்பாட்டை வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios