Asianet News TamilAsianet News Tamil

என் வீட்டை சுத்தி கொலைகாரனுங்க! வீட்டுக்கு போகவே பயமா இருக்குது: அலறும் அமைச்சர்

சமீபத்தில் விழுப்புரத்தில் பட்டப்பகலில் நடந்த பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். என் வீட்டின் அருகே கொலை குற்றவாளிகள் இருப்பதைக் கண்டால், வீட்டிற்கு செல்லவே எனக்கு அச்சமாக உள்ளது. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

I am scared! Murder criminals around my home: Shivering minister
Author
Chennai, First Published Feb 11, 2020, 8:11 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

I am scared! Murder criminals around my home: Shivering minister

*    தமிழகத்தில் தற்போது நடைபெறும் அ.தி.மு.க. அரசின் ஊழலை, கொலை, கொள்ளைகளை சட்டசபை தேர்தலின் போது மக்களிடம் எடுத்துச் சொல்வோம். ஆன்மிகம், இந்து என்றெல்லாம் சொல்லி, தி.மு.க.வை வீழ்த்த சிலர் திட்டமிட்டுள்ளனர். அது நடக்காது. 
-    மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    நடிகர் விஜய் தன் படங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக காட்சிகள், வசனங்கள் வைப்பதால்தான் அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. ஆனால், குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக ரஜினி பேசியதும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் தள்ளுபடியாகிறது. சிம்பிள். 
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங் தலைவர்)

*    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதுதான் அரசின் கொள்கை. மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவிடுகிறது இந்த அரசு. 
-    தங்கமணி (மின்சார துறை அமைச்சர்)

*    குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். உ.பி.யில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பலர் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் சும்மா இருந்த நடிகர் ரஜினி, இப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். கஷ்டம். 
-     பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்)

*    மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க மத்தியரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? அறிஞர்கள் குழுவின் பரிந்துரைகளின் படி, திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை அறிய விரும்புகிறேன். 
-    வைகோ (ம.தி.மு.க. பொதுசெயலாளர்)

*    அரசியல் விஷயங்களெல்லாம் என்னிடம் கேட்காதீங்க. அமைச்சர் ஜெயக்குமார் தவிர ஆளாளுக்கு ஒண்ணு சொல்லக்கூடாதுன்னு முதல்வர் இ.பி.எஸ். உத்தரவு போட்டிருக்கிறார். ஊருக்கு தண்ணீர், தெருவிளக்கு, சாலை வேண்டுமென்றால் என்னிடம் கேட்கலாம். 
-    திண்டுக்கல் சீனிவாசன் (வனத்துறை அமைச்சர்)

*    தமிழகத்தில் தி.மு.க. முடிவினை நோக்கிச் செல்கிறது. அதனால்தான் துணைக்கு ஆள் சேர்க்கின்றனர். சி.ஏ.ஏ. விஷயத்தில் நடிகர் ரஜினி உண்மையை கூறியுள்ளார். உண்மையை சொன்னால் இந்து பயங்கரவாதி என்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவு காலம் வரும். 
-    பொன்னார் (மாஜி மத்தியமைச்சர்)

*    சமீபத்தில் விழுப்புரத்தில் பட்டப்பகலில் நடந்த பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். என் வீட்டின் அருகே கொலை குற்றவாளிகள் இருப்பதைக் கண்டால், வீட்டிற்கு செல்லவே எனக்கு அச்சமாக உள்ளது. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
-    சி.வி.சண்முகம் (சட்டத்துறை அமைச்சர்)

*    தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடிகர் ரஜினிகாந்த், மோடி மற்றும் அமித்ஷாவின் குரல் போல் பேசுகிறார். மதத்தின் பெயரால் தேச மக்களை பிரிக்க நினைக்கிறது மத்திய அரசு. அதற்கு ரஜினிகாந்த் துணை போகிறார். 
-    நாராயணசாமி (புதுவை முதல்வர்)

Follow Us:
Download App:
  • android
  • ios