Asianet News TamilAsianet News Tamil

பெண்களை மதிக்கமாட்டிங்கிறாங்க…மறுபடியும் போவேன்: சபரிமலையில் பதற்றத்தை ஏற்படுத்தும் திருப்தி தேசாய் ....

பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்காமல் தடுக்கிறார்கள். கேரள அரசு பெண்களை மதிக்கவில்லை. 20ம் தேதிக்கு மேல் நான் சபரிமலைக்கு செல்வேன் என்று பெண்உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் கொந்தளித்துள்ளார்
.

I am ready to go sabarimalai told tirupthi desai
Author
Delhi, First Published Nov 17, 2019, 9:10 AM IST

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 63 சீராய்வு மனுக்கள் மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைத்தார்கள். 

தீர்ப்புக்குப்பின் பேட்டி அளித்த மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், " சபரிமலை ஐயப்பன் கோயில் பெண் ஆர்வலர்கள் விளம்பரம் தேடும் அல்ல, போராட்டம் நடத்துவதற்கான இடம் அல்லஅவர்களுக்கு ஒருபோதும் அரசு ஆதரவு அளிக்காது. பாதுகாப்பும் வழங்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

I am ready to go sabarimalai told tirupthi desai

இந்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமாட்டோம் என்று கேரள அரசு கூறியது குறித்து பெண்கள்நல ஆர்வலர் திருப்தி தேசாய் அளித்த பேட்டியில் " 
சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. 

ஆதலால், போலீஸ் பாதுகாப்பின்றி பெண்கள் சபரிமலை செல்ல வேண்டும். அவ்வாறு சென்ற பெண்களையும் தடுக்கிறார்கள். பெண்களுக்கு எதிராக கேரள அரசு செயல்படுகிறது என்றே நான் நினைக்கிறேன்

I am ready to go sabarimalai told tirupthi desai
நவம்பர் 20-ம் தேதிக்குப்பின் சபரிமலை கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். ஒருவேளை கேரள அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டாலும்கூட நான் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்குச் செல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios