Asianet News TamilAsianet News Tamil

நான் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்.. ஆனால் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் சங்கி.. ஆ.ராசா ஆவேசம்

திராவிட கழக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் திமுக எம்.பி ஆ.ராசா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

I am ready to ask for forgiveness but one condition said dmk mp a raja
Author
First Published Sep 19, 2022, 10:08 PM IST

அந்த விழாவில் பேசிய அவர் நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், நீ இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், நீ பாரசீகனாக இல்லாமல் இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இது போன்ற கொடுமை வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அவை இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் ஆகத்தான் இருப்பாய்.

சூத்திரன் என்றால் விபச்சாரியன் மகன் இந்துவாக இருக்கும் வரை உன்னைப் பஞ்சவன் என்றும். நீ இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவனாக தான் இருப்பாய் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் ? எத்தனை பேர் தீண்டத்தகாத ஆட்களாக இருக்க விரும்புகிறீர்கள்' என்று பேசினார். ஆ.ராசா பேசிய இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

I am ready to ask for forgiveness but one condition said dmk mp a raja

மேலும் செய்திகளுக்கு..ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம் நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !

திமுக எம்.பி ஆ. ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆ.ராசாவை கைது செய்ய கோரி காவல்நிலையித்தில் பாஜக மற்றும் இந்து முன்னனி அமைப்பினர்  புகார் மனு கொடுத்து வருகின்றனர்.

திமுக இலக்கிய அணி சார்பில் தலைவர் தளபதியின் தீரமிகு மடல்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தி நகரில் உள்ள சர்.பி.டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, 'இந்துக்களுக்கு நாம் ஒருபோதும் எதிரிகள் அல்ல, இந்துவின் பெயரால் இருக்கக்கூடிய சனாதான தத்துவத்திற்கு நாம் எதிரானவர்கள்.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

I am ready to ask for forgiveness but one condition said dmk mp a raja

கடிதத்திற்கென்று ஒரு பாரம்பரிய வரலாறு உண்டு உலக அளவில் இந்தியாவில் ஜவஹர்லால் நேரு அவருடைய மகள் இந்திரா காந்தி எழுதிய கடிதம் முக்கியமானது. 1962 இவிகே சம்பத்க்கு நேரு எழுதிய கடிதம் முக்கியமான ஒன்று. தமிழகத்தில் இந்தியை திணிக்க மாட்டோம். கலைஞர் கருணாநிதி கடித்ததை படித்தால் உலக வரலாற்றை தெரிந்துக்கொள்ளலாம் எந்த கல்லுரிக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, சாராயம் கூட குடிப்பது தப்பில்லை.

ஆனால் சாதரனமாக நல்லவனாக இருக்காதே, ஒரு கொள்கைக்காக நல்லவனாக இருக்க வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் மூவரின் கலவையாக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார். மன்னிப்பே கேட்க மாட்டேன் என்று சொல்பவன் மனிதனல்ல. மன்னிப்பு கேட்க நான் தயராக இருக்கிறேன். எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் சங்கி' என்று ஆவேசமாக பேசினார் ஆ.ராசா.

மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios