அதிமுக கட்சியாகட்டும், ஆட்சியாகட்டும் எந்தப் பிரச்சனை எனறாலும் முதல் ஆளாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது அமைச்சர் ஜெயகுமார்தான். மேலும் செய்தியாளர்கள் எளிதில் சந்திக்ககூடிய ஒரே நபர் அமைச்சர் ஜெயகுமார்தான்.

ஆனால் அவரை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மைக் குமார் என கிண்டல் பண்ணினார். இந்நிலையில் சென்னையில் இன்று பேட்டி அளித்த ஜெயகுமார், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது என தெரிவித்தார்.

2021-ல் தான் தமிழக சட்டமன்றத்துக்கு  தேர்தல் வரும் என்றும்,  2019-ல் சட்டமன்ற தேர்தல் வருவதை திமுக தொண்டர்களே விரும்பமாட்டார்கள் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் உங்களை மைக் குமார் என்று கிண்டல் செய்கிறாரே என கேட்டதற்கு, மைக் முன்னாடி பேசினால் தவறா?  என கேட்டார். ஆனால் நான் மைக்குமார் அல்ல… மைக்டைசன்….  நாக்கவுட்தான்… எனக்கு பாக்ஸிங் தெரியும் என தினகரனை செமையாக கலாய்த்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முதலமைச்சர் கனவால் தூக்கமின்றி தவிக்கிறார் என தெரிவித்தார்..