ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை.. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.. EVKS. இளங்கோவன்.!
ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவினர் களப்பணியை தொடங்கியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.
ஆளுநர் ரவியின் போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டும் எதிர்ப்பு அவருக்கு மிகப்பெரும் பெருமையையும் நல்ல பெயரையும் ஏற்படுத்தி உள்ளது என ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ். இளங்கோவன்;- ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும். வேறு சிலரும் வேட்பாளர் தேர்வில் உள்ளனர். வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக நான் போட்டியிடவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவினர் களப்பணியை தொடங்கியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்றி தெரிவித்தார். ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் முதல்வர் உழைத்து வருவதாக இளங்கோவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வேட்பாளரை அறிவிக்கும் முன்பே கை சின்னத்துக்காக வாக்கு சேகரிக்க தொடங்கிய அமைச்சர்கள் நேரு, முத்துசாமிக்கு நன்றி. அமைச்சர்கள் இருவரும் பிசாரத்தில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக நான்காக பிரிந்து உள்ளது. அதிமுக சேர்ந்து வந்தாலும் சரி, பிரிந்து வந்தாலும் சரி நாங்கள் வெற்றி அடைவோம். ஆளுநர் ரவியின் போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டும் எதிர்ப்பு அவருக்கு மிகப்பெரும் பெருமையையும் நல்ல பெயரையும் ஏற்படுத்தி உள்ளது என ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.