அதிமுக அரசு நீடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனவும், தமிழக அரசு கோமாவில் உள்ளது எனவும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் எதுவும் நிரந்தரம் கிடையாது என பல்வேறு பிரச்சனைகள் தலை தூக்கி வருகின்றன. 
ஜெ மறைவிற்கு பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற டிடிவி தினகரன் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் சிறைக்கு சென்றார். 
முதலமைச்சராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வத்தின் பொறுப்பு வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டது. 
இரு அணிகளும் சேரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் பிரிந்து சென்றது. அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றது  என பல்வேறு மாற்றங்கள் அதிமுகவினுள் இருந்த வண்ணம் இருக்கின்றன. 
இதனிடையே  தமிழக அரசு செயல்படவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  திருநாவுக்க்கரசர், தமிழக அரசியிலில் மாற்றம் கொண்டு வர அமித்ஷா ஒன்றும் மந்திரவாதி அல்ல என தெரிவித்தார். 
மேலும், அதிமுக அரசு நீடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனவும், தமிழக அரசு கோமாவில் உள்ளது எனவும், குறிப்பிட்டார்.