ஏசியா நெட் தமிழில் ரஜினி முதல்வராக இளமிறக்கப்போவது இந்த இளைஞரைத்தான் என முதன் முறையாக வெளிச்சம்போட்டு காட்டினோம். ’கர்நாடக சிங்கத்தை’ முதல்வர் வேட்பாளராக களமிறக்கும் ரஜினி..? தமிழகம் தலைநிமிர அதிரடி முடிவு..! என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, அண்ணாமலை சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியிருக்கிறார். "மோடியை எனக்கு பிடிக்கும், ஏனென்றால் டெல்லி பிரதமர் அலுவலக லாபியிசத்தை உடைத்தவர், பணமதிப்பு இழப்பீட்டின் மூலம் தொலைநோக்காக சிந்தித்து அதை திறம்பட செய்தவர். ரஜினியின் முதல்வர் வேட்பாளர் இவர் என அவர் பேசியதும், முன்னிறுத்தப்படுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து அவர், ’’சமூக ஊடகங்களுக்கு வெளியேதான் பெரும் சமூகம் இருக்கிறது. நான் அவர்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன். ஆனால், எனக்கு ஒரு முத்திரை குத்த பார்க்கிறார்கள். மதம் என் தனிப்பட்ட விஷயம். நான் இந்து மடங்களுக்குச் சென்றது போல, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிப்பாட்டு தளங்களுக்கும் சென்று இருக்கிறேன். அதனைப் பகிராமல் இதனை மட்டும் பகிர்வதற்கு என்ன காரணம்? எனக்கொரு முத்திரை குத்தி முடக்கப் பார்ப்பதுதானே? நான் முடங்கும் ஆள் கிடையாது.
 
நான் வலதுசாரியோ, இடதுசாரியோ கிடையாது. எது சரியோ அந்த பாதையில் செல்ல விரும்புகிறேன். உண்மையில் இப்போது உடனடியாக தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை. அதற்காகத் தேர்தல் அரசியலை நாங்கள் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. இப்போது நான் வேர்களில் வேலை செய்கிறேன். அடிமட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். விவசாயம் செய்கிறேன். அதற்காக நான் முழு நேர விவசாயி அல்ல. இதன் ஊடாக ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணிக்கிறேன்.

இதையும் படியுங்கள்:- ’கர்நாடக சிங்கத்தை’ முதல்வர் வேட்பாளராக களமிறக்கும் ரஜினி..? தமிழகம் தலைநிமிர அதிரடி முடிவு..!

அரசியல் ஆகட்டும், சமூகம் ஆகட்டும் இப்போது தமிழகத்திற்கு ஒரு புதிய பார்வை தேவை. மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை. ஆனால், அவர்களால் ஒரு மாற்றத்தைக் கண்டறியமுடியவில்லை. அடிமட்டத்தில் வேலை செய்யாமல் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. வேர்களில் வேலை செய்ய அறிவார்ந்த இளைஞர்கள் தேவை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்

.
 
முதல்வராக ஆவதற்கு இப்போது எனக்கு என்ன தகுதி இருக்கிறது? இப்போது நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது இது குறித்துப் பேச என்ன இருக்கிறது. தனிப்பட்ட முறையின் நான் ரஜினி நடிப்புக்கு ரசிகன். அவரை கண்டு வியக்கிறேன். அவர் கட்சி தொடங்கட்டும். கொள்கைகளைக் கூறட்டும். அவரை நோக்கி மக்கள் ஈர்க்கப்பட்டுச் சென்றால் அதில் என்ன தவறு?

ஏன் ஒருவர் வருவதற்கு முன்பே முடக்கப் பார்க்கிறீர்கள்? அமைப்பின் சக்தியைக் கொண்டு என்ன அமைதியாக்க பார்க்கிறீர்கள். இதுதான் இப்போது தமிழ்நாட்டு அரசியலில் பிரச்சனையாக இருக்கிறது. நான் முடங்கும் ஆள்கிடையாது. நான் அமைதியாகச் செல்ல மாட்டேன்" என அவர் தெரிவித்துள்ளார்.