2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்து சிறப்பாக பணியாற்றி வந்தார். 

சுயமரியாதை இயக்கத்தை சீண்டிப் பார்ப்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரையில் பிரபல மருத்துவர் டாக்டர் சரவணன். இவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது கொன்ற பற்றின் காரணமாக மதிமுகவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர், 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்து சிறப்பாக பணியாற்றி வந்தார். 

இதையும் படிங்க;- காலணி வீசப்பட்ட விவகாரம்... அசிங்க அரசியல் தவிர பாஜகவுக்கு வேறு எதுவும் தெரியாது… துரைமுருகன் கண்டனம்!!

இந்நிலையில், காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக 4 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் நேற்று நள்ளிரவு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வருத்தத்தை தெரிவித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் சரவணன்:- மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பாஜக கட்சியில் தொடரவில்லை. பாஜகவில் நான் தொடரப்போவதில்லை. இன்று காலை ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு..போலீஸ் எடுத்த அதிரடி முடிவு - அண்ணாமலை சொன்ன அதிர்ச்சி தகவல்