Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Floods: வங்க கடலில் சூறாவளி.. கன்னியா குமரியில் அடித்து ஊற்றப்போகுது.. அலறும் வானிலை ஆய்வு மையம்..

15.11.2021: தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Hurricane in the Bay of Bengal .. will heavy rain in Kanyakumari ..  Meteorological Center Warning ..
Author
Chennai, First Published Nov 13, 2021, 1:14 PM IST

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (3.6 கிலோ மீட்டர் உயரம் வரை) காரணமாக 13.11.2021: கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், 14.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், நீலகிரி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

Hurricane in the Bay of Bengal .. will heavy rain in Kanyakumari ..  Meteorological Center Warning ..

15.11.2021: தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

16.11.2021, 17.11.2021: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கன்னிமார் (கன்னியாகுமரி) 14, தக்கலை     (கன்னியாகுமரி ), சுரலாகோடு (கன்னியாகுமரி) தலா 13, சிவலோகம்  (கன்னியாகுமரி ), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 12,  புத்தன் அணை (கன்னியாகுமரி) 11, இரணியல்  (கன்னியாகுமரி ), நாகர்கோயில் (கன்னியாகுமரி ) தலா 10, குழித்துறை  (கன்னியாகுமரி ) , சித்தார்  (கன்னியாகுமரி ), கொட்டாரம் (கன்னியாகுமரி ) , பேச்சிப்பாறை (கன்னியாகுமரி ) தலா 9 , மயிலாடி    (கன்னியாகுமரி) , பூதப்பாண்டி  (கன்னியாகுமரி ) தலா 7, சின்னக்கல்லார்  ( கோவை ) , குளச்சல்   (கன்னியாகுமரி ) தலா 5, சூளகிரி  ( கிருஷ்ணகிரி ) , கன்னியாகுமரி  (கன்னியாகுமரி ) , ராதாபுரம் (திருநெல்வேலி ) தலா 4. 

Hurricane in the Bay of Bengal .. will heavy rain in Kanyakumari ..  Meteorological Center Warning ..

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் உருவாகியுள்ளது. 13.11.2021, 14.11.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 14.11.2021, 15.11.2021: மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

16.11.2021, 17.11.2021: மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அரபிக்கடல் பகுதிகள் 13.11.2021 முதல் 14.11.2021 வரை: தென்கிழக்கு அரபிக்கடல், கேரள  கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
.
 

Follow Us:
Download App:
  • android
  • ios