திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் அவரது மகள் கனிமொழி குறித்தும் எச். ராஜா  கீழ்த்தரமாக  பதிவிட்டுள்ளதாக கூறி திமுகவினர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தன்மானமுள்ள மனிதன் என்றால் காவல்துறை பாதுகாப்பு இன்றி பொது வெளியில் வர முடியுமா என எச்.ராஜாவுக்கு திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்வி குறித்து  பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், , "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே." என்று பதிவிட்டிருந்தார்.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எச். ராஜாவின் கொடும்பாவிளை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தன்மானமுள்ள மனிதன் என்றால் காவல்துறை பாதுகாப்பு இன்றி பொது வெளியில் எச்,ராஜா வர முடியுமா? என சவால் விடுத்துள்ளார்.