Asianet News TamilAsianet News Tamil

ஒவ்வொரு இந்திய குடிமகன் வங்கியிலும் ரூ.15 லட்சம்..! உண்மையை போட்டுடைத்த ராஜா..!

hraja announced whether 15 lakhs going to deposit in bank or not
hraja announced whether 15 lakhs going to deposit in bank or not
Author
First Published Jun 2, 2018, 1:58 PM IST


ஒவ்வொரு இந்திய குடிமகன் வங்கியிலும் ரூ.15 லட்சம்..! உண்மையை போட்டுடைத்த ராஜா..!

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டாலே போதும், ஒவ்வொரு இந்திய  குடிமகன் வங்கிக்கணக்கில்  ரூ.15 லட்சம் வரை செலுத்த முடியும் என மோடி தெரிவித்து இருந்தார்.

அதன்படி, பிரதமர் மோடியின் முக்கிய குறிக்கோளான கருப்புப்பண நடவடிக்கையாக  பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அவர் அறிவித்து இருந்தார்.

பின்னர் புது 2000 மற்றும் 500  ரூபாய்  தாள்கள்  வெளியிடப்பட்டது. இதெல்லாம்  ஒருபக்கம் இருக்க...இன்று வரை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை  பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது...

hraja announced whether 15 lakhs going to deposit in bank or not

பிரதமர் மோடி பதவியேற்று  நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், அடுத்த ஆண்டு நடைப்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு கிளம்பி உள்ளது..

சமீபத்தில் நடைப்பெற்ற கர்நாடக சட்டமன்ற  தேர்தலில், பாஜக 104  இடங்களை பிடித்தும், மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி  அமைத்து ஆட்சியை  தக்க வைத்துக் கொண்டது

hraja announced whether 15 lakhs going to deposit in bank or not

இந்நிலையில், பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கியிலும் ரூ15 லட்சம் போடும் அளவிற்கு  கருப்பு பணம் வெளியில் உள்ளது என்றே தான் கூறினாரே தவிர, வங்கி கணக்கில்ரூ. 15 லட்சம் செலுத்துவேன் என  அவர் சொல்லவில்லை... அவர் அப்படி  சொல்லி இருந்தால் என்னுடைய  வேலையை விட்டே செல்கிறேன் என  எச்.ராஜா தெரிவித்து இருந்தார்...

மேலும் உதாரணம் காட்டி பேசிய எச் ராஜா..."ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதும் இவ்வளவு கடன் இருக்கு, அவ்வளவு  கடன் உள்ளது என கூறுகிறோம்.. குழந்தை  பிறந்த உடனே அவ்வாறு கூறுகிறோம்....அப்படியென்றால் அந்த பணத்தை அந்த குழந்தைகளா கட்டப்போகிறது,..? என  கேள்வி எழுப்பினார்

எனவே இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. அதனை புரிந்துக்கொள்ள வேண்டும் என எச்.ராஜா தெரிவித்து உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios