விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மகன் ரவிந்திரநாத்க்கு அ.தி.மு.க ஒதுக்கி இருப்பதாக சொல்லப்படுவதால் இத்தொகுதியில் நட்சித்திர வேட்பாளாரை களம் இறக்க தி.மு.க தலைமையிலான கூட்டணி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸின் செய்தி தொடர்பாளரும்,நடிகையுமான குஷ்புவை விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக நிறுத்தலாம் என்ற பேச்சும் பலமாக பேசப்படுகிறது.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை தேவர் சமுதாய வாக்குகள் அதிகம் அதிலும் கள்ளர் சமுதாய மக்கள் அதிகம் என்பதால் இதே சமுதாயத்தை சேர்ந்த ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரனுக்கு முடிவு செய்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. இதை முறியடித்து இம்முறை விருதுநகர் தொகுதியை எப்படியாவது கைப்பற்ற தி.மு.க முனைப்புக் காட்டுகிறது. காமராஜர் காலத்திலிருந்தே இது காங்கிரஸ் தொகுதி எனப் பெயரெடுத்திருந்தாலும் நடுவில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ போட்டியிட்டு வெற்றி பெற்று ஸ்டார் தொகுதி ஆகிவிட்டது.

அதுபோக இந்த பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றாலும் கடந்த 2009பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் முன்னாள் எம்.பி  மாணிக்தாகூரிடம் குறைந்த வாக்குவித்தியாசத்திலும், தற்போதைய விருதுநகர் அ.தி.மு.க எம்.பியுமான ராதாகிருஷ்ணனிடம் சென்ற 2014- பாராளுமன்ற தேர்தலில் தோற்று இருந்ததால் இத்தொகுதியில் போட்டியிட இம்முறை தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் வைகோ ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. எனவே, இம்முறை விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை எங்களுக்கு ஒதுக்குங்கள் என காங்கிரஸ் தி.மு.க. தலைமையிடம் காங்கிரஸ் கேட்டிருக்கிறது. இதற்கு தி.மு.கவும் காங்கிரஸ்க்கு இத்தொகுதியை தர தலை அசைத்துவிட்டதால் இத்தொகுதியில் அதே ஸ்டார் தொகுதி பாணியில்  குஷ்புவை வேட்பாளராக களம் இறக்கி அ.தி.மு.கவின் விருதுநகர் தொகுதி வேட்பாளராக சொல்லப்படும் ஓ.பி.எஸ் மகன் ரவிந்திரநாத்க்கு நெருக்கடி தர திட்டம் தீட்டுகிறது  தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி.

இதனால் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் ஸ்டார் வேட்பாளராக களம் இறக்கப்படும் குஷ்புவை எப்படி சமாளிக்கப்போகிறார் என முணுமுணுக்கின்றனர் உள்ளூர் அ.தி.மு.கவினர்.