18 வயதிற்கு மேல் ஆபாச படங்கள் பார்த்தால் யாரால் தடுக்க முடியும்? – மத்திய அமைச்சர் கேள்வி

இந்தியா டுடே கருத்தரங்கில் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர்  பிரசாத்  கலந்துக் கொண்டு பேசினார் . அப்போது மத்திய அரசின்  பீம்  செயலி குறித்தும்,அமெரிக்காவின் எச்1பி  விசாவை பற்றியும் கருத்து தெரிவித்தார் .

அப்போது தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பினை இந்தியர்கள் பறிக்கவில்லை எனவும் , அதற்கு மாறாக, இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட 80 நாடுகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்றன  என தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பீம் செயலியை இதுவரை 1.8 கோடி நபர்கள் தரவிறக்கம் செய்திருக்கின்றனர் என்றும்  குறிப்பிட்டு பேசிய அமைச்சர், ஆபாச இணையதளம் குறித்த கேள்விக்கு  பதிலளித்தார் .

அதற்கு,  18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்களுடைய அறையில் ஆபாச படங்கள் பார்ப்பதை  யாரால்  தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி தன்னுடைய  உரையை  முடித்துக்கொண்டார் .

 

.