Asianet News TamilAsianet News Tamil

டெங்குவில் இருந்து எஸ்கோப் ஆக, இந்த மூன்று விஷயங்களை செய்தால் போதும்...!! சமூக வலைதளத்தில் வைரலாகும் டிப்ஸ்..!!

ரூல் நம்பர் ஒன்னு டெங்கி ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும் ரூல் நம்பர் டூ நீர் சத்துதான் டெங்கிவோட டார்கெட் , சோ முடிஞ்ச அளவு தண்ணி ,  ஓ.ஆர்.எஸ், இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும்.  ரூல் நம்பர் 3 இதுதான் முக்கியமான விசயம் காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூனு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுக்காம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம் .

how to escape in dengue fever , have 3 tips to protect us -social media viral info
Author
Chennai, First Published Oct 3, 2019, 6:57 PM IST

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அந்த காய்ச்சல் வந்தால் எப்படி இருக்கும், அதன் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்தும், அதில் இருந்து பாதுகாத்து கொள்ள செய்யவேண்டிய வழிமுறைகள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில்  தகவல் ஒன்று பரவிவருகிறது இந்த தகவல் சேலம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தகவல் விவரம் :- 

how to escape in dengue fever , have 3 tips to protect us -social media viral info

முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும்... அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும்... ஆனா அதுக்கப்பறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க...ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க.. காய்ச்சலோட போக்க பாருங்க முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது.. ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான் முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது ... நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும் அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம் ... இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும். 

how to escape in dengue fever , have 3 tips to protect us -social media viral info

ரத்த டெஸ்ட் களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும் ஆகவே டெங்கிவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ் ரூல் நம்பர் ஒன்னு டெங்கி ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும்ரூல் நம்பர் டூ நீர் சத்துதான் டெங்கிவோட டார்கெட் , சோ முடிஞ்ச அளவு தண்ணி ,  ஓ.ஆர்.எஸ், இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும்.  ரூல் நம்பர் 3 இதுதான் முக்கியமான விசயம் காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூனு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுக்காம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம்.இந்த மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்கி போட்ற ஸ்கெட்ச்ல சிக்காம ஈசியா தப்பிச்சுறலாம் என்று விலாவரியா குறிப்பிடப் பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios