மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருவதாகவும் மாநில அரசு மத்திய அரசிடம் நிதி  கேட்கப் பயப்படுகிறார்கள் என்றும் கொரோனா நிவாரண நிதியை மத்திய அரசிடம் தமிழக அரசு  யாசகம் கேட்பது  போல் கேட்கின்றது. நிதி கேட்க பயப்படுகிறது எடப்பாடி பயப்படுகிறார் என்று திமுக எம்பி டிஆர்.பாலு குற்றம் சாட்டியிருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடமாநில தொழிலாளர்கள் நிலை குறித்தும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் திமுக ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர், டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், செய்யூர் ஆர்.டி.அரசு, திருப்போரூர் இயதயவர்மன், மதுராந்தகம் புகழேந்தி ஆகியோர்  செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிசிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

 அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு..,  "தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சம் பேர் திமுக தலைவரிடம்  அடிப்படை வசதிகள் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து 1900 கோரிக்கை மனுக்கள்   மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். நிவாரணமாக  ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு மாநில அரசும், மத்திய அரசும் வேஷம் போடுகின்றனர். இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க நிதி நிலையில் உள்ளது. அவர்களாக கொடுக்கவில்லை  6 ஆயிரம்   கொடுப்பேன் என்று கூறிவிட்டு ஒரு முறை 2 ஆயிரம் மட்டுமே கொடுத்தனர்.

 அதுவும் கொரோனா நிதி கிடையாது.  இதுகுறித்து பிரதமரிடம் காணொளி காட்சி மூலம் நான் பலமுறை பேசிவிட்டேன்  பலமுறை  திமுக தலைவரும் கடிதம் எழுதினார். ஆனாலும் நடவடிக்கை  எடுக்கவில்லை. நாடாளுமன்றம் இல்லாததால்  கேட்க முடியவில்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது. மாநில அரசு மத்திய அரசிடம் நிதி  கேட்கப் பயப்படுகிறார்கள். கொரோனா நிவாரண நிதியை மத்திய அரசிடம் தமிழக அரசு  யாசகம் கேட்பது  போல் கேட்கின்றது. நிதி கேட்க பயப்படுகிறது. இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.