விமான நிலைய அதிகாரிகளின் சோதனைகளுக்கு பிறகு விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானத்தில் ஏறி அமர்ந்த அவர், திடீரென தனது பயணத்தை ரத்து செய்து அவசர அவசரமாக விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார். நெஞ்சு வலி காரணமாக அவர் வெளியேறியதாக கூறப்பட்டது. மேலும், நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல்நிலை தொடர்பாகச் சமூகவலைத்தளங்களில் வெளியான தகவலை அவரது மகன் கதிர் ஆனந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
துரைமுருகனுக்கு அனுமதி மறுப்பு
தமிழக அமைச்சா் துரைமுருகன் மார்ச் 29ம் தேதி காலை 9.50 மணிக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல சென்னை விமான நிலையம் வந்தாா். அவருடைய விசாவில் ஏதோ பிரச்சனை என்பதால் விமானத்தில் பயணிக்க அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். இதனால், பயணத்தை ரத்து செய்துவிட்டு, விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டாா். அதன்பின்பு அமைச்சரின் விசாவில் உள்ள பிரச்சனையை சரி செய்து, புதிய விசா வாங்கிவிட்டு அன்று மாலை சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் அமைச்சா் துரைமுருகனுக்கு டிக்கெட் போடப்பட்டது.
இதையும் படிங்க;- சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா திமுக அரசு? எடப்பாடி பழனிசாமி கேள்வி!!

திடீர் நெஞ்சு வலி
விமான நிலைய அதிகாரிகளின் சோதனைகளுக்கு பிறகு விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானத்தில் ஏறி அமர்ந்த அவர், திடீரென தனது பயணத்தை ரத்து செய்து அவசர அவசரமாக விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார். நெஞ்சு வலி காரணமாக அவர் வெளியேறியதாக கூறப்பட்டது. மேலும், நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை தொடர்பாக பரவிய தகவலை அவரது மகன் கதிர் ஆனந்த் மறுத்துள்ளார்.

கதிர் ஆனந்த் மறுப்பு
இது தொடர்பாக கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- தற்பொழுது ஊடகங்களில் ஒரு பொய்ச் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அந்தச் செய்தி முழுக்க முழுக்க பொய் செய்தியாகும். என் தந்தையார் திரு துரைமுருகன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வீட்டில் இருக்கிறார். அவர் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை. இந்த பொய் செய்தி ஒரு வதந்தி நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
