சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா திமுக அரசு? என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா திமுக அரசு? என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பெரும்பாண்மையான இடங்களில் திமுக வெற்றிப்பெற்றது. அந்த வகையில் தாம்பரம் மாநகராட்சியில் 31 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக இருப்பவர் சித்ராதேவி. இவரது கணவர் முரளியின் தம்பி தினேஷ். இவருடைய அண்ணி தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனதில் இருந்தே, அவரது நடவடிக்கை முற்றிலும் மாறியது. மேலும் அவரது உடைகளும் மாறின. வெள்ளை சட்டை, ஏரியாக்களில் பஞ்சாயத்து செய்வது மற்றும் கடைகளில் மிரட்டி மாமூல் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினார். மேலும் தன்னுடன் அடியாட்களையும் வைத்துக்கொண்டார். இதுமட்டுமின்றி தனது தற்காப்புக்காக, சுகுமார் என்ற ரவுடி படையுடன் வலம்வந்துள்ளார்.

அவர் கேட்கும் பணத்தை தராவிட்டால், அந்தக் கடையை உடைத்து சேதப்படுத்துவது அவருடைய பாணி என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு பயந்தே ஒயின்ட் அன்ட் ஒயிட் தாதா தினேஷ் வரும் போதே, பணத்தை எடுத்து சில கடைக்காரர்கள் கொடுத்து விடுவார்களாம். இந்த நிலையில், சங்கர் நகர் பகுதியில் உள்ள கடையில் தினேஷ் மாமூல் கேட்டுள்ளார். ஆனால், அந்த வியாபாரி கொடுக்க மறுத்ததால், சாலையில் கிடந்த கற்களால் அடித்து கடையை சேதப்படுத்தியதோடு, கடையில் இருந்த பொருட்களை சாலையில் தூக்கி வீசி ரகளை செய்துள்ளார். திமுக நிர்வாகியின் இந்த அட்டகாசத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் வருவதற்குள், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்கள். பின்னர், அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன்பேரில் திருநீர்மலை பகுதியில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Scroll to load tweet…

விசாரணையில், சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சுகுமார் மீது நிலுவையில் இருப்பதும், அவன் தொடர் கிரைம் குற்றவாளி எனவும் போலீசார் தெரிந்து கொண்டனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா திமுக அரசு? என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், மக்களை அச்சுறுத்தி வரும் இத்தகைய நபர்கள் மீது கண்துடைப்பு கைது நாடகமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா இந்த திமுக அரசு?. தமிழகம் முழுவதும் திமுக கவுன்சிலர்கள் தொடர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் பணி செய்யாமல் மாறாக மாமூல் வசூலிக்கும் பணியும், தொடர்ந்து ரவுடியிசமும் செய்து வந்தால் மக்களே அதற்கு தக்க தண்டனையும் கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.