Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விவேக் மரணத்தில் மர்மம்..? விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம்..!

விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக புகார் தெரிவித்தார். இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்றுக் கொண்டது. 

How did the death of actor Vivek happen ... National Human Rights Commission has taken up the matter ..!
Author
Tamil Nadu, First Published Aug 25, 2021, 11:43 AM IST

நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம். கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக புகார். விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அளித்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. How did the death of actor Vivek happen ... National Human Rights Commission has taken up the matter ..!

சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். அடுத்த நாள் மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், அதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 17 அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  அவர் மாரடைப்பால் மரணமடைந்தார் எனக் கூறப்படாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டதே விவேக் மரணத்திற்கு காரணம் எனக் கூறப்பட்டது.

 How did the death of actor Vivek happen ... National Human Rights Commission has taken up the matter ..!

இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக புகார் தெரிவித்தார். இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்றுக் கொண்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios