பாலியல் வன்முறை செய்த ஆர்.எஸ்.எஸ் சமூக விரோதிகளை எப்படி ஊருக்குள், தெருவிற்குள், வீட்டிற்குள் எங்கள் பெண்கள் அனுமதிப்பார்கள்? என மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பாலியல் வன்முறை பட்டியல் மிக நீளமானது. பெண்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ஏராளம். இப்படியானவர்களை எப்படி ஊருக்குள், தெருவிற்குள், வீட்டிற்குள் எங்கள் பெண்கள் அனுமதிப்பார்கள்? சமூக ஒழுங்கை ஏன் சீர்கெடுக்கிறீர்கள்?
தமிழர்கள் மிகத் தெளிவாகவே சனநாயக ரீதியில் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் #ChennaiCorpRemoveRSS இது இந்தியா முழுதும் எதிரொளித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் சமூக விரோதிகளை எங்கள் ஊருக்கு, தெருவிற்கு, வீட்டிற்கு அனுப்பாதீர் என்பதை இதைவிட உறுதியாக சொல்லமுடியாது.

'இனம்' 'மதம்' 'மொழி' 'தொழில்' என பாகுபாடு பார்க்கக் கூடாது என்றிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இதில் 'ஜாதி' என்பது மட்டும் விடுபட்டுள்ளதே! இந்தியா/இந்துமதத்தின் மிகப்பெரும் பாகுபாடு ஜாதி தானே? அதுதானே தொழிலையும் நிர்ணயித்தது. 'ஜாதி' ஒழியத்தானே அண்ணல் போராடினார்? ஜாதிதான் ஒழியட்டுமே!’’ என அவர் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கும் கேள்வி எழுப்பியுள்ளார்.