சமீபகாலமாக இந்து கோயில்களையும், இந்துக்களையும் தாக்கும் வகையில் சர்ச்சையாக பேசி வருகிறார் திருமாவளவன். அந்த வகையில் அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில், ராமர் கோவில் கட்டப்பட்டால், பாஜக  நாட்டில் உள்ள 100 சதவிகிதம் இந்துக்களை ஒன்றிணைத்து விடுவார். அவர்கள் அப்படி ஒன்று சேர்வதை தடுக்க வேண்டும் என்கிற ரீதியில் அவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த வீடியோவில், ’’பாஜக இந்துக்களை தம் பக்கம் திரட்டிக்கொள்ள முடியும். இதற்கு அவர்களுக்கு பயன்படப்போகும் ஒரே ஒரு திட்டம் ராமர் கோயில் கட்டுவது. 3 ஆயிரம் கோயில் அவர்கள் திட்டமிட்டு நான்கே மாதங்களில் அவர்கள் ராமர் கோயில் கட்டுவது. ராமர் கோயில் கட்டப்பட்டால், அது நிறைவேறினால் இந்துக்கள் ஓரணியில் திரண்டு விடுவார்கள். இதை எப்படி நாம் எதிர்கொள்ளப்போகிறோம்? என உசுப்பி விட்டுள்ளார் திருமாவளவன்.

இதையும் படியுங்கள்:-ரூ. 5 கோடி சம்பளம்... அடுத்தது கல்யாணம்..? சரவணா ஸ்டோர்ஸ் அருளால் அதிர்ஷடக் காற்றில் சிறகடிக்கும் தமன்னா

இந்து மதம் மட்டுமல்ல.. கிறிஸ்தவ, இஸ்லாமிய மதமோ அல்லது வேற எந்த மதமாக இருந்தாலும் பிரச்னை வந்த பிறகு அணுகுவது வேறு விஷயம். ஆனால் பிரச்னை உருவாகும் முன்பே, தூண்டி விடும் வகையில் திருமாவளவன் போன்ற சிலரின் பேச்சு அமைந்து வருகிறது.  திருமாவளவனை போலவே சில தலைவர்களும் பேசி வருகிறார்கள். அவர்களது நோக்கம் மக்களை எப்போதும் பரபரப்புக்கு உள்ளாக்க வேண்டும். மக்களை பதற்றத்தில், பயத்தில் வைத்திருக்க வேண்டும். அதனை வைத்து அரசியலில் பிழைப்பை ஓட்ட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.  இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்களை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் பொதுமக்கள் கருதுகின்றனர்.  

இதையும் படியுங்கள்:-உள்ளாட்சித் தேர்தலால் பழி வாங்கும் படலம்... அதிரவைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்..!

இந்துக்கள் ஒன்றிணைவதில் என்ன தவறு நடக்கப்போகிறது? திருமாவளவன் போன்று சாதியால் சாதியால் மக்களை பிரிக்க முடியாது எனப்படுகிறாரா அவர்? இல்லை உச்சநீதிமன்றம் வழங்கிய தீப்பை செயல்படுத்த விடாமல் எப்படியாவது தடுங்கள் என்று தீவிரவாதிகளுக்கு ஐடியா கொடுக்கிறா? என்கிற சந்தேகம் எழுகிறது. திருமாவளவன் போன்ற மக்களால் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியில் தலைவர் இந்து கோயில்கள் குறித்து சர்ச்சையாக பேசுவதும், பிறகு அதற்காக வருத்தம் தெரிவிப்பதும், மீண்டும் இந்துக்கள் பற்றி மோசமாக விமர்சிப்பதுமாக தன் பேச்சை தொடர்ந்து வருகிறார் திருமாவளவன். 

அவரது முட்டாள் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்புகள் கவனிக்க வேண்டும் என்றும் கேரளாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் விழாவில் பங்கேறதாகவும்  அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி புகார் அளித்ததும் கவனிக்க வேண்டி உள்ளது. இப்படி பிரித்தாளும் பேச்சை திருமாவளவன் மட்டுமல்ல எந்தக் கட்சி தலைவரும், எந்த மதத்தை பற்றியும் பேசினாலும் அது முட்டாள்தனமான பேச்சுதான்.