Asianet News TamilAsianet News Tamil

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட அரவணைக்கும் ஒரே மதம் இந்து மதம்.. வானதி சீனிவாசன்.!

திமுக சமூக நீதி ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி கொண்டிருப்பதாக சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர அமைச்சர்கள் பட்டியல் இனத்தவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது தெரியும் என்றார். 

Hinduism embraces even those who do not believe in God... Vanathi Srinivasan tvk
Author
First Published Nov 10, 2023, 8:56 AM IST | Last Updated Nov 10, 2023, 9:03 AM IST

நடிகர் கமல்ஹாசன் தேர்தலின் போது டார்ச்லைட்டை வைத்து என்ன சொல்லி டிவி யை உடைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

கோவையில்  பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பேட்டியளிக்கையில்;- தனியார் மருத்துவமனையில் இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்துள்ளது. சிறப்பு முகாம் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க;- இதே பொழப்பா போச்சு! நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரைக்குறைவாக பேசும் RS.பாரதி! வானதி சீனிவாசன்!

Hinduism embraces even those who do not believe in God... Vanathi Srinivasan tvk

இந்து மதம் தவிர்த்து மற்ற மதங்களை பற்றி பேசினால் இந்து தர்ம சனாதனத்தில் மட்டுமே கடவுளே இல்லை என்பவர்களை கூட அரவணைக்கும் தன்மை உண்டு. மதங்கள் தாண்டி மனிதர்களை அரவணைக்கும் பக்குவம் இந்து மதத்தில் மட்டுமே உள்ளது. திமுக சமூக நீதி ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி கொண்டிருப்பதாக சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர அமைச்சர்கள் பட்டியல் இனத்தவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது தெரியும் என்றார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Hinduism embraces even those who do not believe in God... Vanathi Srinivasan tvk

முழுக்க முழுக்க பட்டியலினத்தவர்களும்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும்  நடிகர் கமல்ஹாசன் தேர்தலின் போது டார்ச்லைட்டை வைத்து என்ன சொல்லி டிவி யை உடைத்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் என்றார். கோவைக்கு முதலில் போட்டியிடட்டும் அவருக்கு எதிரான வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்கும் என்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துகள் அனைத்துமே கட்சியின் கொள்கை தான் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios