திருமாவை திருகியெடுக்கும் இந்துக்கள் ’காரியம் முடியும் வரை காலை பிடிப்பது! காரியம் முடிந்ததும் கழுத்தை நெறிப்பது! இதுதான் சந்தர்ப்பவாதத்தின் உச்சம். இதை சாதாரண மனிதன் செய்யலாம் தவறில்லை. ஆனால் ஒரு லோக்சபா எம்.பி. இப்படி செய்யலாமா? அன்றைக்கு வாக்குகள் கேட்டு இந்து கோயிலுக்குள் போய் நின்றபோது சிலைகளின் ஆபாசம் திருமாவளவனுக்கு தெரியவில்லையா? ச்சீ.....’ என்று வெளுத்தெடுக்கின்றனர் இந்து அமைப்புகள். 

சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். சமீபத்தில் புதுச்சேரி கம்பன் கலைரங்கில் நடந்த தன் கட்சி கூட்டத்தில் பேசியபோது இந்து கோவில்களை பற்றி அவதூறாக பேசினார்! என்று விவகாரம் வெடித்துள்ளது. ‘ஆபாசமான சிலைகள் இருந்தால் அது இந்து கோயில்’ என்று அவர் பேசிய வீடியோக்கள் கடந்த சில நாட்களாக வைரலாகிக் கொண்டுள்ளன. 

இந்த சூழலில், திருமாவளவனுக்கு எதிராக இந்து அமைப்புகள் கொதித்து எழுந்துள்ளன. கோயமுத்தூர், மதுரை உள்ளிட்ட பல சிட்டிகளில் அவர் மீது அவதூறு புகார்களை கொடுத்து, கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்து மத உணர்வுகளையும், அதன் நம்பிக்கைகளையும் இழிவு படுத்தி பேசியுள்ளார்! என்று பொங்கி வருகின்றனர்.  இது குறித்து வெளிப்படையாக பேசும் இந்து அமைப்புகள் “கடந்த லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டார் திருமா. 

அப்போது பிரசாரம் செய்தபோது, இந்து கோயிலுக்கும் சென்று அங்கிருந்த  அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களிடம் ஓட்டுக் கேட்டார். கோயிலுக்குள் வந்த அவருக்கு அர்ச்சகர்கள் விபூதி பட்டை பூசிவிட்டு ஆசீர்வாதம் வழங்கினர்.  அப்போது அதை ஏற்றுக் கொண்டு, வாய் பிளந்து சிரித்தபடி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார். அப்போதெல்லாம் இந்து கோயில்களில் இருந்த சிலைகள் அவரது கண்ணிற்கு விகற்பமாக தெரியவில்லை. காரணம், ஓட்டு! தான் ஜெயிப்பதற்கு இந்துக்களின் ஓட்டுக்கள் வேண்டும் என்பதற்காக விபூதியையும் ஏற்று, சிரித்தபடி நின்றார். ஓட்டுக்கு கெஞ்சையில் இந்த சிலைகள் ஆபாசமாக தெரியவில்லை. 

ஆனால் இந்துக்களின் வாக்குகளை வாங்கி ஜெயித்த பின் இன்று இந்துக் கோயில் சிற்பங்கள் ஆபாசமாக இருக்கின்றன. தன்னை நம்பி வாக்களித்த பல லட்சம் இந்துக்களின் மத உணர்வை புண் படுத்திட திருமாவுக்கு அசிங்கமாக இல்லையா? கேவலமாக இல்லையா? இவ்வளவு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாக இருப்பது அருவெறுப்பு.” என்று  சாடியுள்ளனர். 
என்னாங்க திருமா!?