Asianet News TamilAsianet News Tamil

காந்தி உருவ பொம்மையை சுட்ட பெண்! நாடெங்கும் வலுக்கும் எதிர்ப்பு... 13 பேர் மீது வழக்கு! இரண்டு பேர் மட்டுமே கைது...

நாடு முழுவதும் காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.  சக்குன் பாண்டே என்ற பெண்  மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு, கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்து ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Hindu Mahasabha leader celebrates Mahatma Gandhi's death by shooting him again
Author
Uttar Pradesh, First Published Jan 31, 2019, 7:52 PM IST

காந்தியின் 71 ஆவது நினைவு தினமான நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் ஒரு கும்பல் காந்தியின் உருவபொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக் கொண்டாடியது.  இந்த காட்சி சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல வைரல் ஆனது.

இதற்கிடையே காந்தி உருவப்படத்தை அவமரியாதை செய்த சக்குன் பாண்டே யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சக்குன் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வேலையை விட்டு நின்ற இவர் அகில பாரதிய ஹிந்து மகா சபாவின் நீதிபதியாக பதவி வகிக்கிறார்.

இந்தச் சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சம்பவத்துக்குத் தொடர்புடைய 13 பேர் மீது அலிகார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்கள் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்து மகா சபையின் செயல், வன்முறையைத் தூண்டி உள்ளது. இது ஒரு பயங்கரவாத செயல் ஆகும். எனவே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பூஜா சகுன் பாண்டே உள்ளிட்ட சனாதன பயங்கரவாதக் கும்பலை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், இந்து மகாசபை என்ற அந்த அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்ய வேண்டும் என பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios