இந்தியாவில் உள்ள இந்து சிறுமிகளை கடத்திக் கொண்டு போய் பலவந்தமாக திருமணம் செய்து வைக்கப்படுவதாக பாகிஸ்தானுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் தெற்கு சிந்து மாகாணத்தின் தார்பர்கர் மாவட்டத்தில் உள்ளது, உமர் கிராமம். அங்கு வசித்து வரும், சாந்தி மேக்வா மற்றும் சர்மி மேக்வா ஆகிய இரண்டு இந்து சிறுமிகள், கடந்த ஜனவரி 14-ம் தேதி கடத்தப்பட்டனர். அதற்கு அடுத்த நாள், மேலும் ஒரு சிறுமி கடத்தப்பட்டார். இவ்வாறு கடத்தப்படும் சிறுமிகளுக்கு, பலவந்தமாக திருமணம் செய்து வைக்கப்படுவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசில், சிறுபான்மையினரான இந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை கடத்திய விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் தூதரகத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்து மதத்தினர் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருப்பதால், அங்கு அரங்கேறும் இம்மாதிரியான சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.