தற்போது இது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா  கூறுகையில் வியாபாரத்தில் சர்வதேச அளவில் சதி இருக்கிறது, 

ஹிஜாப் மாணவிக்கு அல்-கொய்தா தலைவர் பாராட்டு தெரிவித்த நிலையில், தங்களுக்கு யாருடைய ஆதரவும் வேண்டாமென அம்மாணவியின் தந்தை பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் இந்துக்களும்- இஸ்லாமியர்களும் சகோதரர்களைப் போல வாழ்ந்து வருகிறோம் என்றும், எங்களுக்கு யாருடைய ஆதரவும் வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பலரும் பாராட்டி வருகின்றனர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்களுக்கு எதிராக சட்டதிட்டங்கள் தீவிரமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. மாட்டு இறைச்சிக்கு தடை, முத்தலாக் தடை சட்டம், சிஏஏ, ஹிஜாப் அணிய தடை, மசூதிகளில் பாங்கு ஓத ஒலி கட்டுப்பாடு என அடுத்தடுத்து பல சட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வந்த வண்ணம் உள்ளன.

இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய கூடாது என வலியுறுத்தி இந்துத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிப்ரவரி 8ஆம் தேதி மாண்டியாவில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவி முஸ்கனை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என அவர்கள் முழக்கம் எழுப்பினர், அப்போது துணிவுடன் அவர்களை எதிர்த்து நின்று அம்மாணவி அல்லாஹு அக்பர் என முனகினார், அதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மகாராஷ்டிரா காங்கிரஸ் பிரமுகர் மற்றும் மாண்டியா மஜத பிரமுகர் உள்ளிட்டோர் பலர் நேரில் சென்று மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர். பணம் பரிசுப் பொருட்கள் மாணவிக்கு வழங்கப்பட்டது, இதனால் அம்மாணவி தேசிய அளவில் பிரபலமானார்.

தற்போது சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அம்மான் ஹல் ஜவாஹிரி கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மாண்டிய மாணவி முஸ்கனை பாராட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அம்மாணவி அவர் புகழ்ந்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக தொல்லைகள் அதிகரித்து வருகிறது, ஹிஜாபுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி இந்தியாவின் சிறந்த பெண், அவரின் போராட்ட குணம் எனக்கு ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய பெண்களும் ஒன்று திரள வேண்டும். ஹிஜாப் இஸ்லாமின் உரிமை எனக் கூறியுள்ள அவர், மகனை வர்ணித்து கவிதை ஒன்றையும் வாசித்துள்ளார். தற்போது இது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில் வியாபாரத்தில் சர்வதேச அளவில் சதி இருக்கிறது, இதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், சர்வதேச பயங்கரவாத அமைப்பில் இருந்து கூட இதற்கு ஆதரவு வருகிறது, உடனே தேசிய பாதுகாப்பு முகமை இதனை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் மாணவியின் தந்தை உசேன் நாங்கள் இங்கு நிம்மதியாக இருக்கிறோம், இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் எங்களுக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை, தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள், எங்கள் மகள் அன்று அது போன்ற ஒரு கோஷம் எழுப்பி இருக்கக் கூடாது. இப்போது தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்துகிறது என வேதனை தெரிவித்துள்ளார்.