Asianet News TamilAsianet News Tamil

இனி இப்படித்தான் உட்கார வேண்டும்.. பதிவு அலுவலர்களுக்கு அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!

இனி வரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல், மக்களுடன் சரிசமமாக அமர்ந்து பதிவுப் பணியினைச் செய்ய வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

High platforms are not required; Carry out the task equally.. minister moorthy order
Author
Tamil Nadu, First Published Jul 23, 2021, 11:22 AM IST

இனி வரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல், மக்களுடன் சரிசமமாக அமர்ந்து பதிவுப் பணியினைச் செய்ய வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்;- வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி சமீப காலமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை நடைமுறை படுத்தி வருகிறார்.
 
High platforms are not required; Carry out the task equally.. minister moorthy order
பதிவுத்துறை செயலர் மற்றும் பதிவுத்துறை தலைவருடன் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களில் அமைச்சர் கடந்த வாரம் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டபோது பதிவு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உயர்ந்த மேடையில்  அமர்ந்து பதிவு பணி செய்து வருவதால். பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு பதிவு சேவையினை வழங்குவது சிரமமாக உள்ளது கண்டறியப்பட்டது. 

High platforms are not required; Carry out the task equally.. minister moorthy order

எனவே, இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவு பணியினை செய்ய வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையினை உறுதிசெய்யும் வகையில் சார்பதிவாளர்கள் தாங்கள் அமர்ந்துள்ள மேடையினை சுற்றியுள்ள தடுப்பினை உடனடியாக அகற்றி தங்கள் இருக்கையினை சமதளத்தில் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios