high court ban participating school students in mgr centenary functions

சென்னை: 

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுக்கு மாணவ மாணவியரை அழைத்துச் சென்று கூட்டம் சேர்ப்பதற்கு சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளது. 

சேலத்தில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கு, பள்ளி மாணவ மாணவியரை அழைத்துச் சென்று வெயிலில் காய விட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

இது தொடர்பில் சென்னையைச் சேர்ந்த, பாடம் நாராயணன் என்பவர் ஒரு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு மாணவ, மாணவியரை அனுமதிக்கக் கூடாது. இது போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னேற்பாடுகளும் அனுமதியும் இல்லாமல் மாணவர்களை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது முறையான செயல் அல்ல. இத்தகைய பொது நிகழ்ச்சிகளில் குழந்தைகளைக் கலந்து கொள்ள வைப்பதை அனுமதிக்கக் கூடாது. குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி தரக்கூடாது” என்று கூறி, இந்த வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்.