தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்திற்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, 20 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

மக்களின் விருப்பங்களை கேட்டு தயாரிக்கப்பட்டுள்ள பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியமான சிறப்பம்சங்களை பார்ப்போம்.

* இந்து கோவில் நிர்வாகம், ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

* விவசாயத்திற்கு தனி பட்ஜெட்

* மீனவர்களுக்கு வருடாந்திர ரூ.6000 நிதியுதவி

* 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

* 8, 9ம் வகுப்புகளுக்கு இலவச டேப்லெட்

* டிஜிட்டல் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாதந்தோறும் ரேசன் பொருட்கள் வீடு தேடிவரும்.

* தமிழகத்தில் சட்ட மேலவை மீண்டும் கொண்டுவரப்படும்.

* பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும்

* விவசாயிகளுக்கு இலவச சோலார் மின் இணைப்பு வழங்கப்படும்

* தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் மீட்கப்படும்

* பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம்