Asianet News TamilAsianet News Tamil

இனி வள்ளலார் பிறந்த தினம் இப்படித்தான் அழைக்கப்படும்.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி சரவெடி அறிவிப்பு.

வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5-ஆம் நாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு: 

Here After Vallalar's birthday will be called this like .. Chief Minister Stalin's action announcement.
Author
Chennai, First Published Oct 5, 2021, 1:58 PM IST

வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5-ஆம் நாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு: அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 5-10-1823 பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்தார். 

Here After Vallalar's birthday will be called this like .. Chief Minister Stalin's action announcement.

இதையும் படியுங்கள்: அரசை எதிர்த்து போராட அவர்களுக்கு எந்த காரணமும் கிடைக்கவில்லை.. பாஜகவை டாராக கிழித்த அமைச்சர் சேகர் பாபு.

அனைத்து நம்பிக்கையிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்திய ஞான சபையை எழுப்பினார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய இவர், மக்களின் பசியைப் போக்க சத்திய தருமசாலை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எறிந்த வண்ணம், பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகள் எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா ஆறாம் திருமுறையில் எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார்.

Here After Vallalar's birthday will be called this like .. Chief Minister Stalin's action announcement.

இதையும் படியுங்கள்: அட ஆண்டவா.. தாய்மார்களே உஷார், தமிழகத்தில் 41 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு.. அமைச்சர் பகீர் தகவல்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர் சத்திய தருமச் சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி தீர்க்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்த நாளான அக்டோபர்-5ஆம் நாள் இனி ஆண்டுதோறும் தனிப்பெரும்கருணை நாள் என கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. என அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios