Asianet News TamilAsianet News Tamil

அரசை எதிர்த்து போராட அவர்களுக்கு எந்த காரணமும் கிடைக்கவில்லை.. பாஜகவை டாராக கிழித்த அமைச்சர் சேகர் பாபு.

முதலமைச்சரின் அனுமதியுடன் வள்ளலாரை வழிபட்டு அன்னதானத்தை தொடங்கி வைத்துள்ளேன், பசி என்பது இந்த நாட்டில் இல்லாமல் இருக்கவேண்டும் என வள்ளலார் ஆசைபட்டார். சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை புனரமைக்கும் பணி அரசு உதவியுடன் நடைபெற உள்ளது, முதலமைச்சர் சுயமாக சிந்தித்து சுயமாக முடிவெடுப்பதால்தான் அவர் முதலமைச்சராக இருக்கிறார்

They have no reason to fight against the government. Minister Sekarbabu Criticized TNBJP.
Author
Chennai, First Published Oct 5, 2021, 12:20 PM IST

அரசை எதிர்த்து போராடுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால்தான் வேண்டுமென்றே அரசின் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எல்லா நாட்களிலும் கோயிலைத் திறக்க வேண்டுமென பாஜக போராட்டம் நடத்துகிறது என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் பல்வேறு அதிரடி  அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. திமுகவின் மக்கள் நல திட்டங்கள் மிகப்பெரும் அளவில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை என பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இதையும் படியுங்கள்: வாகன ஓட்டிகளே தயாரா இருங்க.. இது அனைத்தும் மாறப்போகுதாம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்.

They have no reason to fight against the government. Minister Sekarbabu Criticized TNBJP.

இதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோயில்களில் மக்கள் அதிக கூடுவர் என்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக, போக்குவரத்து, திரையரங்கு, டாஸ்மார்க் என அனைத்தும்  சகஜமாக இயங்கும் நிலையில் கோவிலுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும் என்றும், அனைத்து நாட்களிலும் கோயிலை திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் அறிவித்துள்ளது. அரசுக்கு  எதிராக பாஜக அறிவித்துள்ள போராட்டத்தை அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். வள்ளலாரின் அவதார திருநாளை முன்னிட்டு சென்னை ஏழுகிணறு பகுதியில் அவர் வாழ்ந்த இல்லத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, 55 ஆண்டு காலம் வாழ்ந்த வள்ளலார் இந்த இடத்தில் முப்பத்தி மூன்று ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

They have no reason to fight against the government. Minister Sekarbabu Criticized TNBJP.

முதலமைச்சரின் அனுமதியுடன் வள்ளலாரை வழிபட்டு அன்னதானத்தை தொடங்கி வைத்துள்ளேன், பசி என்பது இந்த நாட்டில் இல்லாமல் இருக்கவேண்டும் என வள்ளலார் ஆசைபட்டார். சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை புனரமைக்கும் பணி அரசு உதவியுடன் நடைபெற உள்ளது, முதலமைச்சர் சுயமாக சிந்தித்து சுயமாக முடிவெடுப்பதால்தான் அவர் முதலமைச்சராக இருக்கிறார், ஆனால் முதலமைச்சரின் சிந்தனை சரியில்லை என்று சொல்பவர்களின் சிந்தனைதான் சரியில்லை, அதனால்தான் அவரது கட்சியிலேயே அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என பாஜக எச்.ராஜாவை மறைமுகமாக சேகர்பாபு விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்: இது ஆணவத்தின் ருத்ரதாண்டவம்.. யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்..திருமாவளவன் கொதிப்பு.

அரசை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால்தான் தமிழக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக போராட்டம் அறிவித்திருக்கிறது என்றார். ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி கோயில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, பாஜக போராட்டம் நடத்துவது தேவையற்றது, கொரோனாவால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன், கோயில்கள் திறக்கப்படும் என அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios