Asianet News TamilAsianet News Tamil

இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை.. தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. 60 கிலோ மிட்டர் வேகத்தில் சூறாவளி.

டிசம்பர் 05 ,06 கேரள கடலோர பகுதி லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் டிசம்பர் 07 கேரள கடலோர பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல், லத்தச்சத்தீவு,மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50  கிலோமீட்டர் வேகத்திலும்  இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

Heavy to very heavy rain with thunder and lightning .. Warning to the people of Tamil Nadu .. Hurricane at a speed of 60 km.
Author
Chennai, First Published Dec 5, 2020, 2:20 PM IST

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது,  இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக  அதே இடத்தில நீடிக்கக்கூடும்.இதன் காரணமாக (05.12.2020) கடலூர், அரியலூர், மயிலாடுதுறை,  நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்ட ங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Heavy to very heavy rain with thunder and lightning .. Warning to the people of Tamil Nadu .. Hurricane at a speed of 60 km.

06.12.2020: ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக மழையும், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Heavy to very heavy rain with thunder and lightning .. Warning to the people of Tamil Nadu .. Hurricane at a speed of 60 km.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:  கொத்தவச்சேரி (கடலூர்) 19 சென்டிமீட்டர் மழையும் ,  நாகப்பட்டினம்,  காரைக்கால் தலா 16 சென்டிமீட்டர் மழையும் , குடவாசல்   (திருவாரூர்), புவனகிரி  (கடலூர்) தலா 15 சென்டிமீட்டர் மழையும் , சேத்தியாத்தோப்பு   (கடலூர்) 14 சென்டிமீட்டர் மழையும் , தரங்கம்பாடி  13 சென்டிமீட்டர் மழையும் , சீர்காழி  (நாகப்பட்டினம்), டிஜிபி  அலுவலகம்  (சென்னை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா  12 சென்டிமீட்டர் மழையும் , ராமேஸ்வரம் , அண்ணா  பல்கலை , திருப்பூண்டி (நாகப்பட்டினம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி)  தலா 11 சென்டிமீட்டர் மழையும் , ஸ்ரீபெரும்புதூர்  (காஞ்சிபுரம்), கொள்ளிடம், எம் ஜி ஆர் நகர்  (சென்னை) தலா 10 சென்டிமீட்டர் மழையும் , ஊத்துக்கோட்டை  (திருவள்ளூர்),  தூத்துக்குடி, தலைஞாயிற்  (நாகப்பட்டினம்), சிதம்பரம்  (கடலூர்) தலா 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.  

Heavy to very heavy rain with thunder and lightning .. Warning to the people of Tamil Nadu .. Hurricane at a speed of 60 km.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :  டிசம்பர் 05 குமரிக்கடல் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50  கிலோமீட்டர் வேகத்திலும்,  இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 05 ,06 கேரள கடலோர பகுதி லட்சத்தீவு,மாலத்தீவு பகுதிகளில் டிசம்பர் 07 கேரள கடலோர பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல், லத்தச்சத்தீவு,மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50  கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Heavy to very heavy rain with thunder and lightning .. Warning to the people of Tamil Nadu .. Hurricane at a speed of 60 km.

கடல் அலை முன்னறிவிப்பு :  
வடதமிழக கடலோர பகுதிகளில் கோடியக்கரை  முதல் பழவேற்காடு வரை 05.12.2020  இரவு 11:30  மணி வரை  கடல் அலை 1.5 முதல் 3.4  மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 05.12.2020  இரவு 11:30  மணி வரை  கடல் அலை 1.2 முதல் 3.2  மீட்டர் வரை எழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது  .

 

Follow Us:
Download App:
  • android
  • ios