கொரோனா வைரஸ் குறித்து அச்சப்படாமல்  மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திவரும்  நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் .  சென்னை விமான நிலையத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார் ,  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அஞ்சத்தேவையில்லை, 

கொரோனா  வைரஸ் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.   தமிழகத்தில் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிறப்பு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் .  சுமார் 1,800க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ்  இல்லை என அவர் விளக்கமளித்தார் .  காய்ச்சல் ,  இருமல் ,  மூச்சுத்திணறல் இருந்தால்   உடனடியாக மருத்துவர்களை அழைக்க வேண்டும் என்றார்.  

கொரோனா வைரஸ் எதிரொலியாக  விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது , என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார் .  மேலும் பணிகளை ஆய்வு செய்ய அதிநவீன கருவிகளை பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார் .  இதேபோல் திருவிழா , திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும்  இடங்களை  தவிர்ப்பது நல்லது என்றும் மத்திய அரசுடன் இணைந்து தமிழக சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு  பணிகளை கண்காணிக்க 100 பேர் கொண்ட குழு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.