தனது மகன் விஜயபிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கேப்டன் விஜயகாந்த் கலந்துகொள்ளாததால் அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் அவரது உடல்நலம் குறித்து பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சகஜமாக நடமாட முடியாத நிலையில் உள்ளார். அவரது கண் பார்வையும் சற்று மங்கிப்போயுள்ளதால் கட்சி நிர்வாகிகள் உட்பட யாரையும் அவரால் அடையாளம் கண்டு பேசமுடியவில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த அவரது மகன் விஜய பிரபாகரனின் பிறந்தநாள் விழாவுக்கு அவர் உறுதியாக வருவார் என்று நம்பிக்க்காத்திருந்த தொண்டர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். பிறந்தநாள் விழா என்றும் பாராமல் சிலர் வாய்விட்டு அழவும் செய்தனர்.

அவர்களை உடனே அழைத்து சமாதானப்படுத்திய விஜய பிரபாகரன், ‘அப்பா குறித்து பயப்படவேண்டாம். டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியிருப்பதால்தான் அவர் விழாவுக்கு வரவில்லை. டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் அவரை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். சிகிச்சை முடிந்து திரும்பும்போது, அவர் நல்ல திடகாத்திரத்துடன் அடுத்த முதல்வராகும் தகுதியோடுதான் வருவார்’ என்று அனைவருக்கும் தைரியம் சொன்னார்.

நீங்க இல்லாம தமிழக அரசியல் பயங்கர போர் அடிக்குது. பழைய பன்னீர்ச் செல்வமா சீக்கிரம் திரும்பிவாங்க கேப்டன்.