நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி டிஜிட்டல் இந்தியா குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வசனத்தை நீக்க வேண்டும் இ;ல்லாவிட்டால் வழக்கு தொடர்வோம் தமிழிசை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா யார் இந்த ஜோசப்விஜய் குண்டை வீசி  சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தயிருந்தார். தற்போது நடிகர் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி வரும் வேளையில் ட்விட்டரில் ஹெச்.ராஜா நடிகர் விஜய்யை கிண்டலடித்திருக்கிறார் இப்படி..’இலவச டிவியை வீசி எறிந்து படமெடுத்த வீரர் ஆயிற்றே. நேர்மை? இதுதானா என்று .


நடிகர் விஜய் சினிமா தயாரிப்பு குழமமான ஏஜிஎஸ் குழுமம் விநியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடு அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனையிட்டனர்.அதில் முக்கிய ஆவணங்கள் கட்டுக்கட்டாய் பலகோடிக்கான பணம் தங்கம் என கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.;
நடிகர் விஜய் சமீபத்தில் பிகில் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ஏஜிஎஸ் குழமம் தயாரித்திருந்தது. இந்த படம் வெற்றி பெற்று இந்திய அளவில் அதிகமான வசூலை அள்ளியது. வருமானவரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் ஏஜிஎஸ் குழுமம் தாக்கல் செய்த கணக்கும் நடிகர் விஜய் தாக்கல் செய்த கணக்கும் முரண்பாடாக அமைந்திருந்தது.


இதனையடுத்து நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர் சாலிக்கிராமத்தில்  உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். வருமானவரித்துறை அதிகாரிகள் நெய்வேலி சென்று படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் வருமானவரி மோசடியை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யும் வருமான வரிமோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
TBalamurukan