Asianet News TamilAsianet News Tamil

மிகச்சிறப்புன்னு மோதிரம் அனுவித்த எடப்பாடி...! இல்லை... இல்லை.. அவரோட தப்புதான்னு குற்றம் சொல்லும் அமைச்சர் தங்கமணி...!

He is the one who blames the wrongdoer
He is the one who blames the wrongdoer
Author
First Published Feb 27, 2018, 4:03 PM IST


ஜெயலலிதா சிலை வடிவமைப்பாளருக்கு, சிறப்பாக சிலை வடிவமைத்ததாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோதிரம் அணிவித்த நிலையில் ஜெயலலிதா சிலையால் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அதனை வடிவமைத்தவரின் தவறே காரணம் என்று அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த 24 ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திறந்து வைத்தனர். 

மேலும் சிலை வடிவமைப்பாளருக்கு, சிறப்பாக சிலை வடிவமைத்ததாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோதிரம் அணிவித்து கவுரவப்படுத்தினார். 

திறக்கப்பட்ட அந்த சிலை ஜெயலலிதாவின் சாயலில் இல்லை என்று விமர்சனம் எழுந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை, இந்த சாயலில் உள்ளது! அவரைப்போல உள்ளது! என்று விமர்சனம் செய்து வருகின்றனர். 

ஜெயலலிதாவின் சிலை குறித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள சிலையின்கீழ் இவர் தான் ஜெயலலிதா என போர்டு வைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அது ஜெயலலிதா என தெரியவரும் என்றும் கலாய்த்திருந்தார். 

இதனிடையே சிலையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில், தருமபுரியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி சிலையை வடிவமைத்தவர் தவறு செய்துவிட்டதால் அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios