கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஐபிஎஸ்அதிகாரி அண்ணாமலை ரஜினி தேர்வு செய்த முதல்வர் வேட்பாளர்.இவர் திடீரென பாஜகவில் ஐக்கியமானார்.டெல்லியில் பாஜக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஜேபி.நட்டா தலைமையில் மோடியை சந்தித்து கட்சியில் சேர்ந்தார்.

கோவை வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்..

"பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது பெருமை அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது இந்த கட்சி. விவசாயிகளின் வருமானத்தை வரும் 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆக்குவது என்று முடிவு செய்துள்ளது. மேலும் நக்சலிசம் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த கட்சியும் இத்தனை ரிஸ்க் எடுக்காது. இது சாதாரண மனிதனுக்கான கட்சி. கோவை பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமாக உள்ளது. இந்த நகரில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் எம்பி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். எனக்கு தற்போது எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஆனால் கட்சியிலிருந்து பொறுப்பு கொடுப்பார்கள். எங்கள் கட்சி தேர்தலில் நிற்கச் சொன்னால் நிற்பேன் அல்லது களத்தில் இறங்கி வேலை செய்வேன்.எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. தமிழகத்தை நோக்கித்தான் எனது அரசியல் இருக்கும். தமிழகத்திற்கு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி மாநில உரிமைகளைப் பரிக்கிறது என்றும் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்கிற விமர்சனங்கள் முற்றிலும் தவறானது.

கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் கல்விக்கொள்கையில் இந்தி மொழியை இரண்டாவது மொழியாக கட்டாயம் கற்க வேண்டும் என்றது காங்கிரஸ் ஆட்சியில் தான். கொரோனோ நேரத்தில் மாநிலங்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்கின்றனர். ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு பலவழிகளில் மாநில அரசுகளுக்கு உதவி இருக்கிறது.

தமிழகத்தில் சமஸ்கிருதத்தை நுழைகிறது வேறுவிதமான கலாச்சாரத்தை பாஜக நுழைகிறது என்று குற்றச்சாட்டு சொல்கின்றனர். இது முற்றிலும் தவறானது பாரதிய ஜனதா கட்சியின் தலைவரை பார்த்தாலே நமக்கு தெரியும்.இது தமிழர்களுக்கு எதிரான கட்சி அல்ல கேரளாவை விட கர்நாடகாவை விட தமிழ் மொழிக்கு அதிகம் செலவு செய்யும் கட்சி பாஜக.

நான் கண்ணனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நான் கர்நாடகாவில் வேலை பார்த்தபோது அந்த அரசின் ஊதியத்தில் வேலை பார்த்தவன். அதனால் எனது கூற்றை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. கர்நாடகத்தில் ஜெய் கர்நாடகா ஜெய்ஹிந்த் என்று பதவி ஏற்கும் முன்பு உறுதிமொழி ஏற்கும் ஒரு வழக்கம் உள்ளது. அதை போல தான் இதுவும்.இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க நான் கூறவில்லை, தமிழுக்கு தான் எப்போதும் முக்கியத்துவம். நிறைய மொழிகளை நாம் படிக்க வேண்டும் என்பதே எனது கருத்து. நீட் தேர்வை பல நாட்டு பொருளாதார மேதைகளும் பேராசிரியர்களும் கட்டாயமாக எழுத வேண்டும் என்கின்றனர்.

கேரள அரசு, கர்நாடக அரசு இந்த நீட் தேர்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஒரு மருத்துவர் இந்தி தெரியாதவர்களை கூட்டத்திலிருந்து வெளியேறச் சொன்னது தவறு. இதனை அரசின் கொள்கையாக எடுத்துக்கொள்ளக்கூடாது.தமிழக அரசு 4.5 லட்சம் கோடி கடன் சுமையுடன் உள்ளது. டாஸ்மாக்கை நம்பி தமிழக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தமிழகத்தை பற்றி பேச ஆள் இல்லை.

எந்தக் கொள்கையை வந்தாலும் தமிழகத்துக்கு எதிராக இருக்கிறது என்பது மிகவும் தவறானது. சமூக வலைதளங்களில் நான் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு போனேன் அங்கு பிரச்சினை செய்தேன் என்று வதந்திகளை கூறுகின்றனர்.நான் எந்த ஒரு நட்சத்திர விடுதிக்கும் போனதில்லை. அதேபோல ஆர்எஸ்எஸ் மூலமாகத்தான் ஐபிஎஸ் வேலையில் சேர்ந்தேன் என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். நான் பணியில் சேரும் பொழுது காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது.

என் மீது என்ன குப்பை போட்டாலும் தாமரையை வளர்ப்பேன். குப்பையிலிந்து தாமரை முளைக்கும். கடந்த ஆண்டுகளில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகம் முன்னேறி இருக்க வேண்டிய இடத்தை அடைய வில்லை. இதற்கு தான் மாற்றுப்பாதை தேவை என்று கூறினேன்.